som-biggboss

பிக்பாஸ் ஒரு பித்தலாட்டம்.. மொபைல் பயன்படுத்தும் சோம்! வைரலாகும் வீடியோ!

விஜய் தொலைக்காட்சி நிறுவனம் தனது டிஆர்பி ரேட்டிங்கை தூக்கி நிறுத்தும் தூணாக வருட வருடம் பயன்படுத்திவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 85 நாட்களை கடந்து கோலாகலமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை, ‘சொல்லி வச்சு செய்யுற ஸ்கிரிப்ட் நிகழ்ச்சிதான் இது’ என பலரும் கிழித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கான ஆதாரமாக ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் போட்டியாளர்களுக்கு வீட்டிற்குள் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய வசதிகளை தவிர வேறு எந்த சொகுசும் கிடையாது. அத்தோடு  வெளியுலகத்திற்கும் போட்டியாளர்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இருக்காது. இவைதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கியமான விதிமுறை. இதை நம்பித்தான் பலரும் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து வருகின்றனர்.

ஆனால் நேற்று முந்தினம் ஒளிபரப்பான எபிசோடில் சோம் சேகர் செல்போன் பயன்படுத்தி இருப்பது போல் காட்டப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும் இதைப் பார்த்து நெட்டிசன்கள் மலர் பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

அதாவது சனிக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கமல் அனிதாவை தாளித்துக் கொண்டிருந்தார். அப்போது அனிதா, கமலிடம் தனக்கான விளக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அதைப் பதிவு செய்த கேமரா சோமுவையும் சேர்த்து பதிவு செய்துள்ளது.

அதில் சேகர் தலை குனிந்தபடி எதையோ நோண்டிக் கொண்டிருப்பது போல் காட்டப்பட்டிருந்தது. இதை நெட்டிசன்கள் பலரும் சேகர் செல்போனை நோண்டிக் கொண்டு இருக்கிறார் என்று ஆணித்தனமாக கூறிவருகின்றனர்.

தற்போது இதுதான் இணையத்தில் பெரும் வாதமாக மாறி அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை கண்மூடித்தனமாக நம்பி பார்த்துக் கொண்டிருக்கும் பல ரசிகர்களுக்கு இந்த வீடியோ பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மேலும் சோம் சேகரின் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.