சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் ரெடியான படம் தான் “சிவ சிவா”. ஜெய் ஹீரோவாக நடிப்பது மட்டுமன்றி இப்படத்தில் இசை அமைத்ததும் அவர் தான். முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனையுடன் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் தலைப்பை கூட சமீபத்தில் “வீரபாண்டியபுரம்” என மாற்றினர்.
இப்படத்தில் மீனாட்சி, சத்ரு, சரத், ஜேபி, பால சரவணன், முத்துக்குமார், காளி வெங்கட், அருள் தாஸ், மற்றும் பலர் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு, எடிட்டிங் வேலைகளை காசி விசுவநாதன் கவனிக்கிறார்.
ஜெய் சுப்ரமணியபுரம் கெட் அப்பில் மாஸாக உள்ளார். இப்படத்தின் ட்ரைலரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 18ம் தேதி இந்தப் படம் ரிலீசாகிறது. பக்கா கமெர்ஷியல் படம் என்பது ட்ரைலர் பார்த்தே புரிகிறது.