சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த சில்லுக்கருப்பட்டி படத்தில், சமுத்திரக்கனி, சுனைனா, சாரா, நிவேதிதா, மணிகண்டன், ‘ஓகே கண்மணி’ படப் புகழ் லீலா சாம்சன், என பலர் நடித்திருந்த திரைப்படம். பிரதீப் குமார் இசை, இப்படத்தில் மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் என நான்கு ஒளிப்பதிவாளர்கள்.
நான்கு கதைகளின் தொகுப்பு, யதார்த்தமாக ஒரு பயணம். படத்தின் ஸ்பெஷல் என்றால் அதன் மேக்கிங் இசை மற்றும் வசனங்கள்.
டீன் ஏஜ் ஈர்ப்பு, இன்றையை ஐ டி ஜெனெரேஷனின் பரந்த மனப்பான்மை, நடுத்தர வர்க்கத்தின் இயந்திரமயமான குடும்ப வாழக்கை, முதுமை காலத்திலும் அன்பிற்காக ஏக்கம்.. என ஒரு யுகத்தையே நம் கண் முன்னே கொண்டு வந்து இருப்பார் இயக்குனர் ஹலீதா ஷமீம்.
நடிகர் நடிகையர் தேர்வு, லொகேஷன் என இந்த டீம்மின் மெனக்கடல் நல்ல பலனையே தந்துள்ளது. சோகம், தனிமை, ஏக்கம், அன்பு என கதாபாத்திரங்கள் வாயிலாக நம்மையும் திரையினுள் இழுத்து சென்றதே இப்படத்தின் வெற்றி என்றே கூறலாம்.
இந்த படத்தில் நடித்த நிவேதா சதீஷ் தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து சில்லுக்கருப்பட்டி நடிகையா இது என்று ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.
தற்போது ‘இந்த நிலை மாறும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





