thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

shot-boot-three-trailer

வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

Venkat Prabhu-Sneha: திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கலக்கலாக இருக்கும் இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபு, சினேகாவின் மகன் எனக்கு போர் அடிக்குது ஒரு தம்பி வேணும் என்று கேட்கிறார். அதைத்தொடர்ந்து அவரின் பிறந்தநாளுக்கு ஒரு நாயை பரிசாக கொடுக்கின்றனர்.

Also read: எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

அதை தம்பி போல் பார்த்துக் கொள்ளும் சினேகாவின் மகன் தன் இரண்டு நண்பர்களோடு அடிக்கும் கூத்து பசங்க படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் திடீரென அந்த நாய் காணாமல் போகவே பதறி அடித்துக் கொண்டு அனைவரும் தேடுகின்றனர்.

அதைத்தொடர்ந்து யோகி பாபுவின் கைக்கு வரும் அந்த நாய் மீண்டும் தன் உரிமையாளரிடம் சென்றதா என்ற எதிர்பார்ப்புடன் ட்ரெய்லர் முடிகிறது. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் இது ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்தாலும் ஒவ்வொன்றும் புது அனுபவத்தை தான் கொடுக்கிறது. அந்த வகையில் இந்த ஷாட் பூட் த்ரீ நிச்சயம் குடும்ப ஆடியன்ஸை கவரும்.