தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ். தற்போது இவர் மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.
ஆனால் தனுஷ் தற்போது இந்திய சினிமாவில் முக்கியமான நடிகர்கள் பட்டியல் இணைந்துள்ளார் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் அந்த அளவிற்கு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, பாலிவுட் என அனைத்து மொழியிலும் தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
தனுஷ் ஏற்கனவே பாலிவுட் சினிமாவில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது ஹாலிவுட்டில் தீ கிரே மேன் எனும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் பல வருடங்களுக்குப் பிறகு பாலிவுட்டில் அட்ரங்கி ரே எனும் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அக்ஷய்குமார், சாரா அலிகான் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். படக்குழுவினர் இப்படத்தை திரையரங்கில் வெளியிட முடிவு செய்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் தற்போது இப்படத்தை OTTதளத்திற்கு கொடுத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.தற்போது இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர்.