Priyamani movie trailer

இவ்வளவு கொடூரமான டிரைலரை பார்த்திருக்கவே மாட்டீங்க.. ஜெயிலர் வில்லன், பிரியாமணி மிரட்டும் கொட்டேஷன் கேங்

Quotation Gang trailer: நடிகை பிரியாமணி நடிப்பில், இயக்குனர் விவேக் கண்ணன் இயக்கிய கொட்டேஷன் கேங் என்னும் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு திகில் திரைப்படம் ஆகும். பொதுவாக படத்தின் ஒரு சில காட்சிகள் கொடூரமாக இருக்கும். ஆனால் இந்த ட்ரெய்லர் முழுக்க கொடூரமான காட்சிகள், கோரமான முகங்கள் என மிரட்டி இருக்கிறது.

இந்தப் படத்தை இயக்குனர் கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்தியா மொழி படமாக உருவாகி இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த வருடம் வெளியான நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

Also Read:குருதிப்புனல் படத்திற்காக சொந்தமாக தியேட்டர் வாங்கிய கமல்.. டெக்னாலஜி மூலம் பிரமிக்க வைத்த உலகநாயகன்

பிரியாமணியோடு சேர்ந்து பாலிவுட் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராஃப், பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின் ஆக இருக்கும் சன்னி லியோன், பொன்னியின் செல்வன் படத்தில் இளவயது நந்தினி ஆக நடித்த சாரா அர்ஜூன்,ஜெய பிரகாஷ், விஷ்னோ வாரியர், அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கரண்டே, சதீந்தர் மற்றும் ஷெரின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒரு கேங்கில் மெம்பர் ஆவது என்பது சாதாரண விஷயம் இல்லை என்ற வசனத்தோடு தொடங்குகிறது இந்த ட்ரெய்லர். ஒரு கேங் லீடரால் மட்டுமே இன்னொரு கேங் லீடரை கொல்ல முடியும் என மிரட்டல் வசனத்தோடு சன்னி லியோன், ஜாக்கி ஷெராஃப்பை கொலை செய்ய முயற்சிப்பது போலவும் காட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க கொலை, அதிரடி சண்டைகள், ரத்த காட்சிகள் என இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:கமலோடு மோத போகும் சீயான்.. லோகேஷ் கணக்கை முடிக்க மணிரத்தினம் போடும் புது கணக்கு

இந்தப் படம் முழுக்க காஷ்மீர் மற்றும் மும்பை பகுதிகளை சுற்றி எடுக்கப்பட்டிருக்கிறது. பணத்திற்காக கொலை செய்யும் கும்பல்களை மைய்யயமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை இது. இந்த படத்தில் நடிகை பிரியாமணி கொலை கும்பலின் தலைவியாக சகுந்தலா என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் சன்னி லியோனும் பத்மா என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

படத்தின் போஸ்டர் கடந்த வருடம் வெளியான போது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் முக்கியமான கேரக்டர்கள் மொத்தம் பேரும் முகத்தில் ரத்த கரைகளோடும், காயங்களோடும் இருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். நல்ல ஒரு அதிரடி கேங்ஸ்டர் கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த படம் சரியாக இருக்கும்.

Also Read:கைதி 2-விற்கு முன் அதகளப்படுத்த வரும் இரண்டாம் பாகம்.. வில்லன் பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல

deiva-thirumagal-sara-cinemapettai

தெய்வதிருமகள் பேபி சாரா இப்போ எப்படியிருக்காங்க தெரியுமா? கனிந்த பழம்தான் கடைத் தெருவுக்கு வரும்

பேபி சாரா சிறுவயது முதலே ஹிந்தி விளம்பரப் படங்களிலும் மற்றும் குறும்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இயக்குனர் ஏ.எல். விஜய் மற்றும் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தெய்வத்திருமகள் படத்தின் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

தெய்வத்திருமகள் படத்தில் மனநலம் குன்றிய விக்ரமின் மகளாக தோன்றி நடிப்பில் அசத்தி இருப்பார். அந்த வருடம் வெளியான குழந்தைகளுக்கான விருதுகள் மொத்தத்தையும் இவரே அள்ளிச் சென்றார்.

sara-arjun-cinemapettai-4
sara-arjun-cinemapettai-4

அதன் பிறகு மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சைவம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த விழித்திரு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் சில்லுக்கருப்பட்டி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

sara-arjun-cinemapettai-4
sara-arjun-cinemapettai-4

தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்ந்துவிட்டார். மேலும் ஹீரோயின் தோரணை வேறு வந்துவிட்டது. இதனால் மாடர்ன் உடைகளை அணிந்து அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

sara-photo
sara-photo
sara-03
sara-03
sara

பெரிய பெண்ணாக மாறிய தெய்வதிருமகள் சாரா.. இப்படி நெடு நெடுன்னு வளந்துட்டாங்களே

பேபி சாரா சிறுவயது முதலே ஹிந்தி விளம்பரப் படங்களிலும் மற்றும் குறும்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். அவரை இயக்குனர் ஏ.எல். விஜய் தெய்வத்திருமகள் திரைப்படத்திற்காக தமிழகத்திற்கு அழைத்து வந்தார்.

தெய்வத்திருமகள் படத்தில் மனநலம் குன்றிய விக்ரமின் மகளாக தோன்றி நடிப்பில் அசத்தி இருப்பார். அந்த வருடம் வெளியான குழந்தைகளுக்கான விருதுகள் மொத்தத்தையும் இவரே அள்ளிச் சென்றார்.

அதன் பிறகு மீண்டும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் சைவம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு கிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த விழித்திரு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு வளர்ந்துவிட்டார். மேலும் ஹீரோயின் தோரணை வேறு வந்துவிட்டது. இதனால் கவர்ச்சி உடைகளை அணிந்து அவ்வப்போது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதோ புகைப்படங்கள் :

sara-01
sara-01
sara-02
sara-02
sara-03
sara-03