விஜய் சேதுபதியுடன் கெத்தாக பைக்கில் வந்திறங்கும் தமன்னா.. வேற லெவல் வீடியோ!

தமிழ் சினிமாவில் டஜன் கணக்கில் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது போலவே, தெலுங்கில் முன்னணி நடிகையான தமன்னா தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கில் புரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோவில் தமிழ் நடிகரான விஜய் சேதுபதி சுந்தரத் தெலுங்கில் பேசியுள்ளார். இது ரசிகர்களை பரவலாக கவர்ந்துள்ளது. மேலும் தமன்னா விஜய் சேதுபதி இடையேயான வசன உரையாடல்கள் நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுடன் பேசும் வசனங்களை ஞாபகப்படுத்துகிறது.

பைக்கில் செம கெத்தாக இருவரும் வந்திறங்கும் காட்சி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது. தெலுங்கு மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஜெமினி டிவியிலும், தமிழ் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி சன் டிவியிலும் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை இன்னவேட்டிவ் பிலிம் அகாடமி உடன் சேர்ந்து எண்டேமோல் ஷைன் இந்தியா நிறுவனம் தயாரிக்கிறது.

thalaapathy-vijay-47

விஜய்க்கு ஜோடியாக நடித்தும் பட வாய்ப்பு இல்லையா.? 29 வயதில் சீரியலுக்கு வந்த நடிகை!

அட்டகத்தி திரைப்படம் மூலமாக நமது மனதை கவர்ந்தவர் நந்திதா ஸ்வேதா. கன்னட திரைப்பட நடிகை ஆவார். அட்ட கத்தி திரைப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற திரைப்படங்களின் மூலமாக பிரபலமானவர்.

புலி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடதக்கது. இவர் சின்னத்திரையில் நடிப்பதை கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நந்திதா. இருப்பினும் திரைப்பட வாய்ப்புகள் குறைவாக இருந்த நிலையில் சின்னத்திரை பக்கம் வருகிறார் நந்திதா.

சன் தொலைக்காட்சியில் இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த அபியும் நானும் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடிகை நந்திதா நடிக்கிறார். சிறப்பு காட்சியாக வரும் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக சன் டிவியில் வரவிருக்கிறது.

இந்த ப்ரோமோ சன் டிவியில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

masterchef

விஜய் சேதுபதியின் மாஸ்டர் செஃப் டீசர் வெளியானது.. அடேங்கப்பா பில்டப் ஓவரா இருக்கே!

மக்கள் மத்தியில் என்னதான் டிவி சீரியல்களுக்கு வரவேற்பு இருந்தாலும், அதைத் தாண்டி ஒரு சில ரியாலிட்டி ஷோக்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. உதாரணமாக, சமீபத்தில் விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களும் மிகவும் பிரபலமாகினர். தற்போது இந்த நிகழ்ச்சி அடுத்த சீசனுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் அதுமட்டுமல்லாமல் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கிலிலும் முன்னிலை பெற்றது.

தற்போது இதற்கு போட்டியாக சன் டிவியும் மாஸ்டர் செஃப் எனும் புதிய சமையல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. எனவே அதிகப் படங்களை மட்டும் இல்லாமல் அதிக ரசிகர்களையும் கைவசம் வைத்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை சன் டிவி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்கான டீசர் சன் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் இந்த நிகழ்ச்சியில் பிரபல சமையல் வல்லுநர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர்த்தி சம்பத், ஹரிஷ் ராவ் மற்றும் கவுசிக் ஆகியோர் இதில் நடுவர்களாக உள்ளனர்.

ஹாலிவுட் ரேஞ்சுக்கு பில்டப் செய்யும் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு பெறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியின் குக் வித் கோமாளிக்கு போட்டியாக இந்த நிகழ்ச்சி களம் காண உள்ளது.