காஜல் அகர்வால் வட மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட நட்சத்திர நாயகி ஆவார். இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்பது தனது கனவாகவே இருந்தது என்று சில பேட்டிகளில் கூறியிருந்தார்.
தமிழில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் அனைவருடனும் பல வெற்றிப்படங்களில் இதுபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபகாலமாக ஒரு பாட்டு என்றாலும் கூட நடனம் ஆட தயாராக இருந்தார்.
இந்நிலையில் தமிழில் தற்போது வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கோமாளி படத்தில் நடித்ததன் மூலம் தொலைந்துபோன தனது கேரியரை மீண்டும் தூக்கி நிறுத்தி விட்டார் என்றே சொல்லலாம். முன்னணி நடிகர்கள் தாண்டி அடுத்த கட்ட நடிகர்களுடன் நடிப்பது தீவிரமாக இருக்கும் இவர், நயன்தாராவின் சமீபத்திய கொள்கையை பின்பற்றி வருகிறார்.
இவர் புடைவையில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அந்த போட்டோ கீழே,



