தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து சிவகார்த்திகேயன் வைத்து பல இயக்குநர்களும் படங்களை இயக்கி வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் இவருக்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தெலுங்கு இயக்குனருடன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதைப்பற்றி இன்னும் வெளிப்படையாக படக்குழு அறிவிக்கவில்லை.
ஒரு நிகழ்ச்சியை புரோமோஷன் செய்ய வேண்டுமென்றால் பிரபலமாக இருக்கும் நடிகர்களை அழைத்து வந்து பேச வைப்பார்கள் அப்படி ஏராளமான படங்களை பல பிரபலங்கள் அறிமுகம் செய்துள்ளனர். தற்போது சிவகார்த்திகேயன் அவரது படங்களை விட மற்ற நடிகரின் படங்களுக்கு பிரமோஷனில் கலந்து கொண்டு வருகிறார்.
சிம்புதேவன் இயக்கத்தில் கசடதபற எனும் படத்தில் ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ப்ரியா பவானி சங்கர் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க திரில்லர் கதையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இப்படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டு உள்ளார். தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.