திரைத்துறையில் முன்னணி பாடகராக வலம் வந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் மக்களை மகிழ்வித்து வந்தார்.
கடந்த மாதத்தில் எஸ்பிபி கொரோனா தோற்றால், பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதன்பின் இவரைப் பற்றிய தவறான வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வந்ததால், எஸ்பிபி-யின் மகன் சரண் அவ்வப்போது தனது தந்தையின் உடல்நிலையை குறித்த தகவல்களை உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினார்.
எஸ்பிபி கொரோனாவிலிருந்து விடுபட்டு பூரண குணம் அடைந்துவிட்டார் என்ற தகவல் அடங்கிய வீடியோவை சரண் வெளியிட்டு, ரசிகர்களின் பிரார்த்தனைக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் எஸ்பிபி-யின் நுரையீரலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பிஸியோதெரபி சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைப்பதாகவும், அவரால் தினமும் 15-20 நிமிடம் உட்கார முடிகிறது என்றும் வாய் மூலமாக உணவு உட்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர் என்றும் அவ்வப்போது சரண் தனது தந்தை குறித்த விவரங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது தன்னுடைய அப்பா வீடு திரும்புவதற்கு அதிக ஆர்வம் காட்டுவதாக சரண் அண்மையில் வெளியிட்ட வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆரவாரம் செய்து வருகின்றனர்.

எனவே இன்னும் சில நாட்களில் பாடகர் எஸ்பிபி சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.