முதல்முறையாக அரசியல் தலைவருக்கு வாழ்த்து கூறிய அஜித்.. ஆடிப்போன எதிர்க்கட்சிகள்

படத்தின் பிரமோஷன், பேட்டி, பொது நிகழ்ச்சிகள் மற்றும் எந்த ஒரு அரசியல் நிகழ்வுகளிலும் இவர் கலந்து கொள்ள மாட்டார்.

stalin-uthayanithi

56 வயதில் ஸ்டாலினுக்கு கிடைத்த பதவி.. 45 வயதிலேயே கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின், என்ன பொறுப்பு தெரியுமா?

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்று ஒன்றரை வருடங்கள் கடந்த நிலையில் இன்று அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

house

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள்.. அதிரடியாக தொடங்கி இன்றுவரை ஏமாற்றுகிறதா சங்கம்?

ஆர்.கே. செல்வமணி தலைமையில் தொழிலாளர்களுக்கு சென்னையை அடுத்த பையனூரில் ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

நிவர் புயலுக்கு எதிராக தமிழக முதல்வர் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைகள்.. தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை!

தமிழகத்தில் அதிமுக கட்சியின் சார்பில் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

தற்போது  தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ள நிவர்  புயலை எதிர்கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதாவது வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் மாமல்லபுரம் மற்றும் காரைக்குடிக்கு இடையே கரையை கடக்கும்போது தீவிர புயலாக மாறும் என்பதால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கடந்த மூன்று மணி நேரமாக சென்னையிலிருந்து 450 கிலோ மீட்டர் தூரத்திலும் புதுவையிலிருந்து 410 கிலோ மீட்டர் தூரத்திலும் நிவர் புயல் ஒரே இடத்தில் மையம் கொண்டு அனைவரையும் மிரள வைத்திருக்கிறது.

தற்போது நிவர் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் அரசு விடுமுறையை அதிரடியாக அறிவித்துள்ளார் தமிழக முதல்வர். மேலும் நிலைமைக்கு ஏற்றவாறு விடுமுறை நீட்டிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அத்தியாவசிய பணியில் உள்ள அரசு அலுவலர்கள் மட்டும் நாளை பணிபுரிபவர்கள் என்றும், தாழ்வான 433 இடங்களில் பணி புரியும் கலெக்டர்களை தனி கவனம் செலுத்தவும் உத்தரவிட்டிருக்கிறார் தமிழக முதல்வர்.

மேலும் தமிழக முதல்வர், பொதுமக்கள் எவரும் தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறிருக்க, எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சோதனை நடத்தி வருகிறாராம் முதல்வர். இந்த நிலையில் நாளை ஒருநாள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

edappadi-1
edappadi-1

எனவே, இவ்வாறு தமிழக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இயற்கை சீற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியிருக்கும் எடப்பாடியாருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகின்றனர் தமிழக மக்கள்.