அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கோப்ரா படத்தில் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சில வருடங்களாக ஒரு வெற்றிப்படத்தை கூட கொடுக்க முடியாமல் விக்ரம் தடுமாறி வருகிறார். இதனால் கோப்ரா படத்தை மலைபோல் நம்பி உள்ளார். ஏனென்றால் இப்படத்தில் தனது கடின உழைப்பை போட்டு பல கெட்டப்பில் நடித்துள்ளார்.
Also Read :பல வருடமா கிடப்பில் போடப்பட்ட படம்.. போஸ்டர் பார்த்துப் பெருமூச்சு விட்ட விக்ரம்
கோப்ரா படத்தின் ரிலீஸ் ஒவ்வொரு முறையும் அறிவிக்கப்பட்ட சில காரணங்களால் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 31 ஆம் தேதி பான் இந்தியத் திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதனால் தற்போது படத்திற்கான பிரமோஷன் வேலையை படக்குழு ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தை லலித் குமாரின் 7 ஸ்கிரீன் தயாரித்துள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது.
Also Read :உண்மையில் விக்ரமுக்கு என்ன பிரச்சனை.. மேனேஜர் வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தற்போது கோப்ரா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் கண்டிப்பாக விக்ரமுக்கு கோப்ரா படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர்.
Also Read :நாட்டாமையிடம் சென்ற பஞ்சாயத்து.. உறவுக்காரரான விக்ரமுக்கு என்ன தீர்ப்போ!