29 வயதான ராசி கன்னா 2013 -ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.
பின்னர் 2014 -ம் ஆண்டு மனம் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமானார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

அதர்வா நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அடங்க மறு படத்தில் தோன்றினார்.
அயோகியா முருகதாஸின் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்கிய படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்திருப்பார். கடந்த வருடம் வெளிவந்த சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். தற்போது ‘சைத்தான் கா பச்சா’ என்ற தமிழ் படத்தில் நடித்தும் வருகிறார்.

லாக் டவுன் இவரையும் விட்டு வைக்கவில்லை போர் அடிப்பதால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி உள்ளார்.