தலையில் முட்டையை உடைத்த தாமரை, இசைவாணி.. கலவரமான பிக்பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 5 ல் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களுக்கு என் கேள்விக்கு என்ன பதில் என்ற டாஸ்க்கை பிக்பாஸ் கொடுக்கிறார்.

முதலாவதாக இசைவாணி மற்றும் தாமரைச்செல்வி இருவரும் வருகின்றனர். இருவரும் எதிர் எதிரே சேரில் அமர்ந்து இருக்க, அவர்களுக்கு நடுவில் ஒரு கிண்ணத்தில் முட்டை வைக்கப்பட்டுள்ளது.

இப்போது பிக்பாஸ் யாரிடம் கேள்வி கேட்கிறாரோ அவர் சரியான பதிலை சொல்ல வேண்டும். தவறான பதிலை கூறுபவர்கள் எதிரில் இருப்பவர் தலையில் ஒரு முட்டையை உடைக்க வேண்டும் என்பதுதான் டாஸ்க்கின் விதிமுறை.

ஏற்கனவே புகைச்சலில் இருக்கும் தாமரை மற்றும் இசைவாணி இருவரும் வேண்டுமென்றே தவறான பதிலை கூறுகின்றனர். பிக்பாஸ் கன்பெக்சன் ரூமிற்கு முதலில் வந்த நபர் யாரென்று இசைவாணியிடம் கேட்கிறார். அதற்கு இசைவாணி தெரியவில்லை என்று கூறி தாமரையின் தலையில் முட்டையை உடைக்கிறார்.

முட்டையை உடைக்கும்போது இசைவாணி, தாமரையிடம் பயப்படாத இது கல்லு இல்லை என்று கூறி ஓங்கி தலையில் அடிக்கிறார். அதற்கு பழிவாங்கும் விதமாக அடுத்த கேள்விக்கு தாமரை தெரியாது என்று கூறி இசைவாணியின் தலையில் முட்டையை உடைக்கிறார்.

இருவரும் மாற்றி மாற்றி முட்டையை தலையில் உடைத்து கொள்வதை சக போட்டியாளர்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பொழுது நிரூப், தாமரையிடம் நீ வேண்டும் என்று தப்பாக பதில் சொல்லி முட்டையை உடைக்கிறாய் என்று கூறுகிறார். அதற்கு தாமரை நீயா அப்படி நினைச்சுகிட்டா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்று பதிலளிக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் எதிரும் புதிருமாக இருக்கும் தாமரை, இசை வாணியின் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருவருக்கும் இருக்கும் ஒரு ஒற்றுமை சின்ன விஷயத்தை கூட பெரிதாக எடுத்துக் கொள்வதுதான். இப்படியே சென்றால் அடுத்தடுத்த வாரங்களில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

isaivani-tamarai

மனசாட்சியை கொன்னுட்டு என்னால வாழ முடியாது.. வாக்குவாதத்தில் தாமரை, இசைவாணி

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்க் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் இன்று தாமரை இசை வாணியின் கண்ணாடியாக மாறுகிறார்.

ஏற்கனவே தாமரை, கமல் முன்பு இசை வாணியை பற்றி குறை கூறினார். அதனால் தாமரையின் மேல் கடுப்பில் இருந்த இசைவாணி இன்று அந்த கோபத்தை தாமரையிடம் வெளிப்படுத்துகிறார்.

தன்னுடைய கண்ணாடியாக மாறிய தாமரையிடம், இசைவாணி மனசாட்சியை தொட்டு சொல்லு நீ நக்கலா பாட்டு பாடுனியா இல்ல சந்தோசமா பாடுனியா என்று கேட்கிறார். அதற்கு தாமரை உன்னை பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை அதனால் நான் பாட்டு பாடுனேன் என்று கூறுகிறார்.

இதனால் காண்டான இசைவாணி பார்க்கும் மக்களுக்கு தெரியும் என்னை பற்றி என்று சொல்கிறார். இப்படியே வாக்குவாதம் முற்றி போய் ஒரு கட்டத்தில் தாமரை மனசாட்சியைக் கொன்று விட்டு என்னால வாழ முடியாது என்று கோபமாக எழுந்து செல்கிறார்.

இந்த ப்ரோமோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தொடங்கிய புதிதில் தாமரை மற்றும் இசை வாணியின் கதைகளை கேட்டு அவர்களுக்காக நாம் வருத்தப்பட்டோம். ஆனால் நாளுக்கு நாள் அவர்கள் தங்களுடைய அப்பாவியான முகத்திரையை கிழித்து ஒரிஜினல் முகத்தை காட்டி வருகின்றனர்.

இசை வாணி, தாமரை இருவருக்கும் விளையாட்டு தான் புரியவில்லை என்று நினைத்தால் சபை நாகரிகமும் தெரியவில்லை. அவர்கள் சற்று நாவடக்கத்தோடு இருந்தால் இன்னும் சில காலம் பிக்பாஸ் வீட்டிற்குள் நீடிக்கலாம்.

isaivani-bigg-boss

இசைவாணியை கமலிடம் போட்டுக்கொடுத்த போட்டியாளர்கள்.. வார்னிங் கொடுக்கப்பட்ட முதல் கேப்டன்

பிக் பாஸ் சீசன் 5 இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில் கமல் போட்டியாளர்களிடம் இந்த வார கேப்டன் இசைவாணி எவ்வளவு நல்ல கேப்டனாக இருந்தார் என்று கேட்கிறார்.

அதற்கு போட்டியாளர்கள் அனைவரும் இசைவாணி ஒரு நல்ல கேப்டனாக இல்லை என்று பதிலளித்தனர். ஒவ்வொருவரும் காரணத்தை சொல்ல சொல்ல இசைவாணியின் முகம் முதலில் அதிர்ச்சியை காட்டியது. பின்னர் கவலையான முகத்துடன் அமர்ந்திருந்தார்.

அதிலும் தாமரை, இசைவாணி சாப்பாடு பரிமாறும் போது அன்பாக செய்யாமல் கொஞ்சம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறினார். இதைக் கேட்ட இசைவாணி அடிப்பாவி என்பது போல் தாமரையைப் பார்த்தார்.

அனைவருடைய கருத்தையும் கேட்ட கமல், இசைவாணியிடம் முதன் முதலாக வார்னிங் கொடுக்கப்பட்ட கேப்டன் நீங்கள் தான் என்று கூறினார். அதற்கு இசைவாணி பதில் பேச முடியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

சில நாட்களாக இசைவாணியின்  நடவடிக்கையில் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அதாவது ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு வரும்போது இருந்த இசைவாணி ரொம்பவும் பாவப்பட்ட முகமாக தெரிந்தார்.

ஆனால் தற்போது இருக்கும் இசைவாணி கொஞ்சம் அகங்காரத்துடன் இருக்கிறார். இமான் அண்ணாச்சி கொடுத்த கிரீடத்தை தலையில் போடாமல் தூக்கி எறிந்ததே அதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

மேலும் ராஜுவிற்கு தேவையில்லாத ஆணியை புடுங்குபவர் என்ற பட்டத்தை கொடுத்தவர் இசைவாணி. தற்போது அவரே வீட்டில் தேவையில்லாத ஆணியாக மாறிவிட்டார்.