rrr

பாகுபலியை மிஞ்சுமா ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர்.. ரசிகர்களின் நேரடி விமர்சனம் வீடியோ

ராம்சரண் மற்றும் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட வீரர்களை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. மேலும் மகாபாரதம் மற்றும் ராமாயணம் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களும் இப்படத்தில் இடம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம்சரன் மற்றும் என்டிஆரின் நடிப்பு படத்திற்கு பக்கபலம் என பலரும் கூறி வருகின்றனர்.

எஸ்எஸ் ராஜமௌலி இப்படத்தை மிக பிரமாண்டமாக இயக்கியுள்ளார். காட்சி காட்சி தனது திறமையை வெளிப்படுத்தி உள்ளதாகவும் ராஜமௌலிக்கு இப்படம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் கொடுக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இப்படத்தில் ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் இருவரும் சிறிது காட்சியில் மட்டும் இடம்பெற்றதாக கூறியுள்ளனர்.

ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இப்படத்தை பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஒரு சில ரசிகர்கள் ராம்சரண் மற்றும் என்டிஆர் போல் பல நடிகர்கள் இணைந்து படங்கள் நடிக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்.