anti indian

ஆளும் கட்சியை மறைமுகமாக வச்சு செய்துள்ள ஆன்ட்டி இந்தியன்.. ஸ்னேக் பீக் விடியோ

தமிழ் சினிமாவில் பல படங்களை விமர்சனம் செய்ததன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் எந்த ஒரு இயக்குனரையும் புகழ்ந்து பேசியதை கிடையாது. எந்த ஒரு படத்தை எடுத்தாலும் அதில் இருக்கும் குறையை மட்டும் சுட்டிக்காட்டி கேவலப்படுத்துவது வாடிக்கையாக வைத்திருந்தார்.

ஒருகட்டத்தில் இவரை ரசித்த ரசிகர்களே எல்லா இயக்குனர் படத்தையும் குறை சொல்கிறீர்கள் ஏன் இதுவரைக்கும் நீங்கள் ஏதாவது ஒரு படத்தை எடுத்துள்ளீர்களா படம் எடுத்தால் தான் அதனுடைய கஷ்டம் தெரியும் என ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தனர்.

இதனால் ப்ளூ சட்டை மாறன் ஆன்ட்டி இந்தியன் எனும் படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலரை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டிருந்தார் அதில் மூன்று மதத்தையும் மற்றும் அரசியலை மையப்படுத்தி படத்தின் கதை உருவானதாக தெரிந்தது. தற்போது ஆன்ட்டி இந்தியன் படத்திலிருந்து sneak peek வீடியோ வெளியாகி உள்ளது.