சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்துள்ள வாழ் படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் புதுமுகங்களாக உள்ளன. முக்கியமாக பிக்பாஸ் கவினின் நண்பன் பிரதீப் ஆண்டனி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் கவின் செய்த தவறுக்காக நேரில் வந்து கன்னத்தில் அரைந்த செயல் மக்களால் பாராட்டு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசரை பார்க்கும்போது நன்னிலம் கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கதைக்களம் இருக்கலாம் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் இது மூன்றாவது படமாகும்.

இந்த படத்தை இயக்கியுள்ள அருண் பிரபு மிக பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற அருவி படத்தின் இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கனா, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, வாழ் ஆகிய படங்கள் இடம் பிடித்து உள்ளன. இதில் நான்காவது படமாக தன் சொந்த தயாரித்து நடித்து வெளிவர காத்துக்கொண்டிருக்கும் டாக்டர் படமும் அடங்கும். இந்த பிப்ரவரி 2020 வெளிவர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.