விஷால் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அயோக்கியா. இந்த திரைப்படம் வரும் பத்தாம் தேதியில் வெளியாக உள்ளது. இப்படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடித்துள்ளார்.
மேலும் வம்சி கிருஷ்ணன் ,பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து உருவான டெம்பர் படத்தின் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரியும்.
படத்தை பார்த்த தணிக்கை குழு தற்போது அயோக்கியா படத்திற்கு U/A சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த வாரம் ஜீவா,ஆதர்வ முரளி போன்ற முன்னனி ஹீரோக்களுடன் மோதுகிறார் விஷால். இந்த நிலையில் படத்தின் சில நிமிடகாட்சிகள் வெளியாகியுள்ளன.