arun-vijay-red

இணையத்தை மிரளவிடும் தடம் ரீமேக் ரெட்(RED) பட டிரைலர்.. அட, நம்ம நிவேதா பெத்துராஜ் இருக்காங்க!

2019ஆம் ஆண்டு அருண் விஜய்யின் இரட்டை வேட நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தடம். மகிழ்திருமேனி இயக்கியிருந்த இந்தப் படம் வசூல் ரீதியாக ஒரு கலக்கு கலக்கியது என்றே சொல்லலாம்.

வித்தியாசமான திரில்லர் அம்சமாக வெளியாகி ரசிகர்களைக் மிகவும் கவர்ந்த திரைப்படம் தடம். இந்நிலையில் இந்த படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்ய போட்டி போட்டு வந்தனர்.

தற்போது தெலுங்கு நடிகர் ராம் போத்தனி என்பவர் நடிப்பில் ரெட்(RED) என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்.

காக்கிச்சட்டையில் நிவேதா பெத்துராஜை பார்ப்பதற்கே தாறுமாறாக இருக்கிறார் என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். தமிழில் தமன் இசையமைத்த தடம் படத்திற்கு தெலுங்கில் மணிசர்மா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இரண்டாவது கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த அம்ரிதா என்பவர் நடித்துள்ளார். திருமலா கிஷோர் என்பவர் ரெட் படத்தை இயக்கியுள்ளார்.

தற்போது ரெட் படத்தின் ட்ரெய்லர் இணையதளங்களில் வெளியாகி செம வைரலாகி உள்ளது.