கடந்த பிக் பாஸ் சீசனில் மீரா மிதுனுக்கு அடுத்ததாக அதிகம் வெறுப்பை சம்பாதித்தவர் அபிராமி. பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டால் சினிமா வாய்ப்புகள் வீடு தேடி வரும் என நம்பியவருக்கு மொத்தமாக ஊத்தி மூடியது அவரின் நடவடிக்கை.
பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்ததுமே காதல் மன்னன் கவின் மீது ஆசை வந்ததாக உணர்ந்தார். பிறகு அப்படியே அந்த ஆசை கடந்த பிக் பாஸ் சீசன் வின்னர் முகேன் மேல் விழுந்தது. இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என மக்கள் இடையிலேயே வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட நபராகவே மாறிய அபிராமியை கொஞ்சம் மாற்றியது தல நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் தான். இந்த படத்தில் அபிராமியின் கதாபாத்திரம் வலுவாக இருந்ததால் ரசிகர்களிடம் ஒரு நல்ல இமேஜை வளர்த்துக்கொண்டார்.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படத்தை தவிர வேறு எந்த படத்தின் வாய்ப்பும் கையில் இல்லாததால் தற்போது வெப்சீரிஸ் பக்கம் தலைகாட்ட உள்ளார். இதனை பிரபல பாடகர் எஸ் பி சரண் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தொடையை இன்சூரன்ஸ் செய்து விட்டீர்களா என்று கலாய்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் எசகுபிசகான இடத்தில் பச்சை குத்தி உள்ளார் என்று கமெண்ட் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.
