கைதி படத்தில் தனது மிரட்டலான குரலின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜுன் தாஸ், இவருக்கு இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் இதற்கு முன்னதாகவே 2012ம் ஆண்டு பெருமான் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமில்லாமல் ‘அந்தகாரம்’ படத்தில் நடித்துள்ளார், அப்படி என்றால் இருள், பிசாசின் ஆதிக்கம் நிறைந்திருக்கிற இடம் என்று பொருளாம்.
இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளிவந்தது , யூடியூப் சேனலில் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் உள்ளது . இதை பார்த்துவிட்டு ரசிகர்கள் ஒருவர் குரலுக்காக மட்டுமே இந்த ட்ரைலரை பார்க்கிறேன் என்று அர்ஜுன் தாஸ்யை புகழ்ந்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கைதி படத்திற்கு சில வருடங்களுக்கு முன்னதாகவே இந்த படம் எடுத்து முடித்து விட்டார்களாம்.
தற்போது அர்ஜுன் தாஸ் ரசிகர்களால் மிகவும் பேசப்படும் நடிகர், அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார். இந்த சூழ்நிலையில் ‘அந்தகாரம்’ வெளியிட்டால் கண்டிப்பாக கல்லா கட்டலாம் என்பது தான் படக்குழுவினரின் பெரும் எதிர்பார்ப்பு.
அர்ஜுன் தாஸ், வினோத் ஆகியோர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த ட்ரைலரை பார்க்கும் போது செம்ம மாஸ்டர் பீஸான படம் என்பதில் எந்த ஒரு தயக்கமும் இல்லை. இதில் ரகசியம் என்னவென்றால் அட்லி வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே அவருக்கு 10% லாபம் மட்டும் படக்குழுவினரால் அளிக்கப்படுகிறதாம்.