dinesh-cinemapettai

பில்லா பட நயன்தாரா வெறியனாக அட்டகத்தி தினேஷ்.. கலகலப்பாக வெளியான நானும் சிங்கிள் தான் டிரைலர்

அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் தினேஷ். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் தினேஷுக்கு அட்டகத்தி தினேஷ் என மகுடம் சூட்டப்பட்டது.

அதன்பிறகு இவர் ஆடுகளம் மற்றும் எதிர்நீச்சல், கபாலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த திரைப்படம் இரண்டாம் உலகத்தின் கடைசி குண்டு.

படத்தின் பெயருக்கு ஏற்றது போலவே இப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் பெரிய நஷ்டம் குண்டு விழுந்தது குறிப்பிடத்தக்கது. இவரது நடிப்பில் நானும் சிங்கிள் தான் என்ற படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் கோபி புன்னகை பூ கீதா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.