valimai-Trailer

3 வருடம் கழித்து வலிமையுடன் வந்த அஜித்.. இணையத்தை மிரட்டும் வலிமை டிரைலர்

பலவருட காத்திருப்பு, பலவருட போராட்டங்கள், கொரோனா பிரச்சனை போன்ற பல தடங்கலுக்கு இடையே வெற்றிகரமாக எடுக்கப்பட்ட படம் வலிமை. இந்தப் படத்திற்காக அஜித் ரசிகர்கள் ஏங்கிக் கிடக்கின்றனர். முதல் அமைச்சர் ஸ்டாலினிடம் ஆரம்பித்து பிரதமர் நரேந்திர மோடி வரை வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

பல கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளிவர தயாராக உள்ளது. இந்த படம் 2022 பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் பார்க்கலாம். இதற்காகவே அஜித் ரசிகர்கள் பல ஆயிரக்கணக்கில் செலவழித்த டிக்கெட்டை வாங்குவார்கள். சென்றவாரம் அந்த படத்தின் டீசர் என்று சில நிமிட காட்சிகள் வெளியாகின

அடிதடி சண்டை காட்சியில் மிரட்டி உள்ள  அஜித்தின் இந்த டிரைலர்( Valimai Trailer ) தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. முதல்பாதியில் காவல்துறையாக நடித்துள்ள அஜித்தை இரண்டாம்பாதியில் பெற்ற தாய் கூட தவறாக நினைப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ஏதோ ஒரு துரோகத்தில் சீக்கி பழிவாங்கும் நோக்கில் விஸ்வரூபம் எடுக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

இதே தேதியில் தான் 3 வருடத்திற்கு முன் 2018ஆம் ஆண்டு விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளிவந்து அமோக வெற்றி பெற்றது அதே சென்டிமென்டில் தற்போது இந்த டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.