Connect with us
Cinemapettai

Cinemapettai

tabu-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

20 வருடமாக பிரபல நடிகருடன் ரகசிய உறவில் இருந்த தபு.. அவருக்காக திருமணமே செய்து கொள்ளவில்லையாம்!

காதல் தேசம் படத்தின் மூலம் 1996 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தபு. அதன்பிறகு தல அஜித்துக்கு ஜோடியாக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மேலும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்தார். தற்போது 48 வயதாகும் தபு திருமணம் செய்யாமல் இருப்பதற்கு ஒரு ஹீரோ தான் காரணமாம்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜய் தேவ்கான். இவருக்கும் நடிகை தபுவுக்கும் இளமை காலங்களில் காதல் துளிர்விட்டது. அதன்பிறகு அஜய் தேவ்கன் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டாலும் தபு உடன் உறவில் இருந்தார்.

கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நீடித்த அந்த உறவு சமீப காலங்களாக இல்லையாம். அஜய் தேவ்கன் வாரிசுகள் வளர்ந்துவிட்டதால் தபு உடன் பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொண்டாராம்.

இருபது வருடங்களாக எனக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய எண்ணம் ஏற்படாததற்கு அஜய் தேவ்கன் என்மீது வைத்திருந்த ஆசைதான் காரணம் என தெரிவித்துள்ளார்.

48 வயது ஆன நிலையிலும் தொடர்ந்து படுக்கையறை காட்சி, கவர்ச்சி வேடங்கள் போன்றவற்றில் பட்டையை கிளப்பி வருகிறார் நடிகை தபு. இனியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதுதான் நல்லது என விரும்புகிறாராம்.

கண்டிப்பாக அஜய் தேவ்கன் மீண்டும் தன்னுடன் சேருவார் என காத்துக் கொண்டிருக்கிறாராம். திருமணம் செய்து கொள்ள வேண்டாம், என்னுடன் இருந்தால் போதும் என அவர் கூறியுள்ள கருத்து தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
To Top