Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல 59 – பிங்க் ரிமேக்கில் நடிக்கவிருக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஒரிஜினல் வெர்ஷனில் நடித்த டாப்ஸி பண்ணு சொல்லியது என்ன தெரியுமா ?

பிங்க்
பாலிவுட்டில் 25 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல மல்ட்டிப்ளெக்ஸ்களில் படம் 50 நாட்களை கடந்து ஓடியது இப்படம்.

pink
பிங்க் ரிமேக்கில் நடிக்கும் நடிகர் – நடிகையர் , மற்றும் டெக்கினிக்கல் டீம் விவரம் இன்று வெளியானது. கதைப்படி ஹீரோ அஜித் ஆக இருப்பினும், முக்கிய ரோல் என்பது அந்த பெண் மற்றும் அவரின் தோழிகள் கதாபாத்திரம் தான். இன்றைய நவநாகரிக உலகில் தனித்து நிற்க நினைக்கும் பெண் இதுபோன்ற சவால்களை சமாளிக்க நேரிடும் என துகிலுரித்து காட்டும் இப்படத்தின் கதை. அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போல இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு (டாப்ஸி பண்ணு) சாரதி தான் அஜித் (அமிதாப் பச்சன்)
இந்நிலையில் இன்று காலை முதல் வாழ்த்துக்கள் குவிய தன ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டி தெறிக்கவிட்டார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

thala 59
அந்த ஸ்டேட்டஸுக்கு ஒரிஜினல் வெர்ஷன் நாயகியான டாப்ஸீ பதில் தந்தார். அதில் “என் வாழ்த்துக்கள், எனது சினிமா காரியரில் முக்கியத்துவம் வாய்ந்த படம், உனக்கும் அது போலவே அமையட்டும் ” என்று கூறினார்.

thala 59
இவரும் பதிலுக்கு “நன்றிகள் டாப்ஸீ. காத்திருக்கிறேன்.” என்று பதில் தந்தார்.
