தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் டாப்ஸி. இவர் நடிப்பில் விரைவில் பிங்க் என்ற பாலிவுட் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வந்து பலரையும் கவர்ந்தது, இதில் பெண் கொடுமைகள் பற்றி பேசப்படுகின்றது, இந்நிலையில் வட இந்தியா பத்திரிக்கை ஒன்றில் இந்த படத்தில் டாப்ஸி கற்பழிப்புக்குள்ளான பெண்ணாக நடிக்கிறார் என கூறியுள்ளனர்.

இதைக்கண்ட டாப்ஸி இந்த படத்தில் நான் அப்படியெல்லாம் நடிக்கவில்லை, இந்த மாதிரி பேட்டியும் நான் தரவில்லை என கோபமாக கூறியுள்ளார்.