fbpx
Connect with us

Cinemapettai

T20 சூப்பர் ஓவரின் புதிய விதிமுறையை அதிரடியாக வெளியிட்ட ஐ.சி.சி.. ஆப்பு அடிச்சுட்டாங்கலோ.?

Sports | விளையாட்டு

T20 சூப்பர் ஓவரின் புதிய விதிமுறையை அதிரடியாக வெளியிட்ட ஐ.சி.சி.. ஆப்பு அடிச்சுட்டாங்கலோ.?

2019-ல் இங்கிலாந்தில் உலக கோப்பை போட்டி நடைபெற்றது, அதில் இறுதிப் போட்டி டையில் முடிந்து சூப்பர் ஓவர் மூலம் யார் வெற்றி என்பதை தீர்மானிக்கலாம் என்று முடிவெடுத்தனர்.

ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டது சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இந்த நிலையில் அதிக 4 ரன்கள் எடுத்த அணி எது என்பதை பார்த்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.

இந்த போட்டியின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனால் ஐசிசி சூப்பர் ஓவரை வைத்து முடிவு எடுப்பதற்கான விதிமுறைகளை மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

அதாவது டையில் முடியும் T20 போட்டி சூப்பர் ஓவர் கொடுக்கப்படும். அந்த சூப்பர் வரும் டையில் முடிந்தால் மீண்டும் சூப்பர் ஓவர் வீசப்படும்.

2 விக்கெட்டுகள் எடுத்தால் இன்னிங்ஸ் முடிவடையும் அதில் ஒரு அணிக்கு ஒரு ரிவ்யூ கொடுக்கப்படும் என்பது போன்ற புதிய விதிமுறைகளை ஐசிசி அறிவித்துள்ளது. தற்போது இந்த விதிமுறைகள் T20  மட்டுமே ஒருநாள் போட்டிகளுக்கு கிடையாதாம்.

இது மட்டுமல்லாமல் கடைசி ஓவரில் பில்டர்ஸ் எங்கு நிறுத்தப்பட்டார்கலோ அங்கேதான் சூப்பர் ஓவரிலும் நிறுத்தப்பட வேண்டும். இந்தப் புதிய விதிமுறைகள் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து,  தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா இடையிலான T20 தொடரிலிருந்து நடைமுறைக்கு வருகிறதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top