மழை சேட்டையால் இந்தியா வெற்றி.. ஆனாலும் மகிழ்ச்சி இல்லை.. ரசிகர்கள் பொலம்பல்

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த டி20 மேட்சில் ரோகித் சர்மா அதிரடியாக ஆடி 50 ரன்களை குவித்தார்.

இந்த வெற்றி டக்வொர்த் லூயிஸ் மூலம்  இந்தியா பெற்றது. மழைக் காரணமாக இந்த முறை கையாளப்பட்டது, அதுமட்டுமில்லாமல் வானிலை அறிக்கை மிகவும் மோசமான நிலையில் இருந்ததால் வேறு வழி இல்லை என்ன கூறிவிட்டனர்.

இந்திய அணி அபாரமாக ஆடி 167 ரன்கள் குவித்தது, இதில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 67 ரன்களை குவித்தார். இதில் முக்கியமாக இறுதி ஓவரில் 3 சிக்சர்களை அடித்து இந்திய அணி ரன் விகிதத்தை ஏற்றியது.

பின்பு களமிறங்கிய மேற்கிந்தியதீவு அணி 15.3 ஓவர்களில்  98 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது என்று அறிவித்தனர். மேட்ச் பார்க்க வந்தவர்கள் வேதனையில் கிளம்பினர். ஆட்டம் விறுவிறுப்பாக செல்லும் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்.

இதனால் இந்திய அணி டி20 மேட்ச் இன் சீரியஸ் வெற்றி அடைந்தது. இன்னும் இந்த சீரிஸில் ஒரு மேட்ச் இருக்கிறது அதில் முக்கியமான வீரர்கள் ஆட மாட்டார்கள் மற்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Comment