சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில் 50வது போட்டியில் களமிறங்கி, அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கோஹ்லி (82). இதற்கு முன் இலங்கையின் தில்ஷன் 74 (2013, எதிர்-தெ.ஆப்.,), இங்கிலாந்தின் மார்கன் 71 (2014, இந்தியா), பாகிஸ்தானின் அப்ரிதி 52 ரன் (2012, இலங்கை) எடுத்தனர். 1 சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில் ‘சேஸ்’ செய்த போது, 1000க்கும் அதிகமான ரன்கள் எடுத்த வீரர்களில் பிரண்டன் மெக்கலத்தை (1006, நியூசி.,) முந்தி, முதலிடம் பிடித்தார் கோஹ்லி (1016). வார்னர் (892, ஆஸி.,) மூன்றாவதாக உள்ளார். 3 சர்வதேச ‘டுவென்டி-20’ அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் கப்டிலை (1806, நியூசி.,) முந்தி, மூன்றாவது இடம் பிடித்தார் கோஹ்லி. இவர் இதுவரை 50 போட்டியில் 1830 ரன்கள் எடுத்துள்ளார்.

முதல் இரு இடத்தில் மெக்கலம் (2140, நியூசி.,), தில்ஷன் (1889, இலங்கை) உள்ளனர். 4 இலங்கை அணிக்கு எதிராக களமிறங்கிய நான்கு ‘டுவென்டி-20’ போட்டியிலும், கோஹ்லி (68, 77, 56, 82) அரைசதம் விளாசினார். 15,000 நேற்று 7 ரன் எடுத்த போது, சர்வதேச கிரிக்கெட்டில் 15,000 ரன்கள் எடுத்த வீரர் ஆனார் கோஹ்லி. இவர் டெஸ்டில் 4,658 ரன் (60 போட்டி), ஒருநாள் போட்டிகளில் 8,587 ரன் (194) மற்றும் ‘டுவென்டி-20’ போட்டியில் 1830 ரன்கள் (50) என, இதுவரை மொத்தம், 304 போட்டிகளில் 15,075 ரன்கள் எடுத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  கோலி பிறந்த நாள் கொண்டாட்டம்.!இணையதளத்தில் தீயாய் பரவும் போட்டோ.!

476 இந்தியாவின் தோனியின் அசத்தல் ‘ஸ்டம்பிங்கில்’ நேற்று மாத்யூஸ் திரும்பினார். இதையடுத்து, அன்னிய மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் ‘டுவென்டி-20’ என, மூன்று போட்டிகளிலும் சேர்த்து, அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான, முதல் விக்கெட் கீப்பர் (476) என்ற பெருமை பெற்றார் தோனி. அடுத்த இடங்களில் பவுச்சர் (475, தெ.ஆப்.,), கில்கிறிஸ்ட் (460, ஆஸி.,), சங்ககரா (367, இலங்கை) உள்ளனர். ‘நாட் அவுட் ‘ நாயகன் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், முதல் போட்டியில் தோனி களமிறங்கும் முன் இந்தியா வெற்றி பெற்றது.

அதிகம் படித்தவை:  யாரை தேர்வு செய்வது என்று மண்டையை போட்டு பிச்சிகொள்ளும் கோலி.!!!

அடுத்த நான்கு போட்டியில் தோனி, 45, 67, 49, 1 ரன் மற்றும் ‘டுவென்டி-20’ போட்டியில் 1 ரன் என எடுத்த தோனி, இந்த ஐந்து போட்டிகளிலும் கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். 34 சர்வதேச ‘டுவென்டி-20’ போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்கள் வரிசையில், நெஹ்ராவை (26 போட்டி) சமன் செய்தார் பும்ரா (25 போட்டி). இருவரும் தலா 34 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். 53 இந்திய அணிக்கு எதிரான ‘டுவென்டி-20’ போட்டியில் அறிமுகம் ஆகி, அதிக ரன்கள் எடுத்த இலங்கை வீரர் வரிசையில் முனவீரா (53 ரன்) மூன்றாவது இடம் பிடித்தார்.

முதல் இரு இடத்தில் 2009ல் சங்ககரா (78 ரன், நாக்பூர்), தில்ஷன் (61, கொழும்பு) உள்ளனர். தலை தப்பியது நேற்று 15.5வது ஓவரை வீசினார் மலிங்கா. இதை சற்று முன்னோக்கி வேகமாக அடித்தார் கோஹ்லி. பந்து நேராக அம்பயர் ருச்சிரா தலையை நோக்கிச் செல்ல, உடனடியாக சுதாரித்த அவர், இடது புறமாக கீழே விழுந்து தப்பினார்.