Connect with us
boomerang-movie

டி20-க்கு சுரேஷ் ரெய்னா அழைப்பு! ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்?

News | செய்திகள்

டி20-க்கு சுரேஷ் ரெய்னா அழைப்பு! ஆனால் அதுக்கு முன்னாடி ஒரு கண்டிஷன்?

ஆஸ்திரேலியாவுடனான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பிற்கு முன் சுரீஷ் ரெய்னா தனது உடல் தகுதியை நிருபிக்குமாறு தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.தற்போது துலீப் ட்ராபியில் இந்திய ப்ளூ அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

மேலும், துலீப் ட்ராபியின் இறுதிப் போட்டி தற்போது இந்தியா ப்ளூ மற்றும் இந்தியா ரெட் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.இந்த இறுதிப்போட்டி முடிந்தவுடன் நேராக அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று அங்கு உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்வர எனத் தெரிகிறது.

அங்கு வழக்கமான உடல் தகுதி அடிப்படை தேர்வுகளுடன் ‘யோ-யோ’ டெஸ்ட் உம் வைக்கப்படும். இந்த ‘யோ-யோ’ தேர்வில் ரெய்னா தேர்வானால் ஒழிய, முதலில் அவர் இந்திய அணிக்கு தேர்வாக அவருடைய பெயர் பரிசீலனை செய்யப்படும்.

முன்னர் நடந்த ‘யோ-யோ’ தேர்வில் ரெய்னா உடல் தகுதி இல்லாமல் கலந்து கொண்டு 16 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்குத் தேர்வாக குறைந்தது அந்த தேர்வில் 19.5 மதிப்பெண்களையாவது பெற வேண்டும். இதனால் ஆஸ்திரேலியாவுடனான தொடரில் தேர்வு செய்ய ரெய்னாவின் பெயரைக் கூட தேர்வுக் குழு பரிசீலனை செய்யவில்லை.

தற்போது இன்னும் இரண்டு ஒரு நாள் போட்டியள் மீதமுள்ள நிலைய்ல் இந்த அறிவிப்பை தெரிவித்துள்ளார் ரெய்னா. துலீப் ட்ராபியின் இறுதிப் போட்டி 29 ஆம் தேதி முடிவடைகிறது. ஆஸ்திரேலியாவுடனான் டி20 போட்டிகள் அக்டோபர் 7ஆம் தேதி துவங்குகிறது.

இந்த போட்டியை மையமாக வைத்து அவர் உடல்தகுதியி தேறி வருகிறார்.

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பெற தீவிரமாக முயற்சி செய்து வருகிறார் சின்ன தல சுரேஷ் ரெய்னா. சில நாட்களுக்கு முன்னர் தான் ரவி சாஸ்திரி 2019 உலக கோப்பை அணிக்கான தகுதி பற்றி கூறியிருந்தார். அதாவது,2019 உலககோப்பை இந்திய அணியில் இடம் பெற அசாத்தியமான ஆட்டம் மட்டும் போதாது, இந்திய அணியில் திறமையான வீரர்கள் ஏராளமாக உள்ளனர். அதன் காரணமாக அணியில் இடம் பெற தகுதி திறமை மட்டும் போதாது உடல் தகுதியும் பெற்றிருக்க வேண்டும் அப்போது தான் இந்திய அணியில் இடம் பெறுவது பற்றி முதலில் பரிசீலிக்கப்படும், எனக்கூறியுள்ளார்.

இதனை கவனித்து வந்த சுரேஷ் ரெய்னா உடனடியாக , உலகத்தின் மிகச்சிறந்த இரண்டு உடற்கூறு ஒழுங்கு நிபுனர்களை தனது உடற்பயிற்ச்சி நிபுணர்களாக நியமித்துள்ளார். அவர்களில் ஒருவர் பெகரூஸ் ரெய்னாவின் உடல் ததுதியையும் ஒழுங்கையும் மேம்படுத்தும் விதமாக செயல்படுவார். மற்றோர் நிபுணர் ஹங் ங்யுயேன் ரெய்னாவை மனதளவிலும் அவரது வாழ்வியலை விளையாட்டிலிருந்து வேறுபடுத்தி அவரது ஆட்டத்திறனை மேம்படுத்தவும் செயல்படுவார்.

அடுத்த ரஞ்சி கோப்பை போட்டியில் நன்றாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும் ,ஆகவே ரஞ்சி கோப்பைக்கு முன்னதாக அவர்களை நியமித்துள்ளார். வரும் காலங்களில் இந்தியாவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை என இந்தியா 23 போட்டிகளில் அவர்களை எதிர்த்து இந்தியாவில் ஆட உள்ளது. இந்த சீசனை சரியாக பயண்படுத்தும் நோக்கிலும் ரெய்னா செயல்படுகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top