Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒரு நாள் போட்டியிலும் வந்துவிட்டார் சின்ன தல ரெய்னா.! அடிச்சிதுடா ஜாக்பாட்.

நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ கிரிக்கெட் வாரியத்திற்கு கேட்டுடுச்சு என துள்ளி குதிக்கிறார் சுரேஷ் ரெய்னா, தற்பொழுது ரெய்னாவிற்கு லக் அடித்துள்ளது இனி அவர் ஒருநாள் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆம் இந்தியா தென்னாபிரிக்கா மோதும் ஒரு நாள் போட்டி கேப்டவுனில் நடைபெறுகிறது இது அனைவரும் அறிந்ததே மேலும் இதில் விளையாட ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் அணியில் எடுக்கபட்டத்திர்க்கு முக்கிய காரணம் இருக்கிறது இந்த அணியில் ஏற்கனவே சில சீனியர் வீரர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் அதேபோல் ரெய்னா T20அணியில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெய்னா T௨௦ அணியில் இடம் பிடித்துவிட்டார் என்பது சில நாட்களுக்கு முன் இந்திய அணி விவரம் வெளியிடப்பட்டது இதில் கோஹ்லி, ரோஹித், ஷிகர் , லோகேஷ் ராகுல், ரெய்னா, டோணி, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மனிஷ் பாண்டே, அக்சர் பட்டேல், சாஹல், குல்தீப், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஜெயதேவ் உனட்கட், ஷர்த்துல் தாக்குர் ஆகியோர் உள்ளனர்.

ரெய்னா மூன்று யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்தார் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனால் சில வாரத்திற்கு முன்பு யோ யோ டெஸ்டில் சின்ன தல ரெய்னா வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரெய்னா இந்த டெஸ்டில் வெற்றி பெற தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி எடுத்துள்ளார்.

ரெய்னா தென்னாப்ரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் இடம் பெற்றுள்ளார் ஏன் என்றால் 15 பேர் கொண்ட அணியில் இருந்து மனிஷ் பாண்டே விலகி இருக்கிறார் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் இருந்து விலக அதனால் ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார்

ஆனாலும் ரெய்னா போட்டியில் விளையாடுவது சந்தேகம்தான். மனிஷ் பாண்டே முதல் இரண்டு ஒருநாள் போட்டியிலும் களம் இறக்கப்படவில்லை. இதனால் ரெய்னா 15 பேர் அணியில் இடம்பிடித்தாலும் விளையாடும் அணியில் இருப்பது சந்தேகம் தான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top