தமிழ் சினிமாவில் மிக குறைந்த வருடத்திலேயே முன்னணி இயக்குனர் என்ற பெயரை எடுத்தவர் இயக்குனர் அட்லி, இவர் இதுவரை 3 படங்கள் மட்டுமே எடுத்துள்ளார்,3 படத்தை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனர் லிஸ்டில் இணைந்துவிட்டார்.

T.siva
T.siva

இவர் இயக்கிய படங்கள் ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படமும் பிரமாண்ட வசூல் செய்தது, மேலும் இவர் படங்கள் பல்வேறு சர்ச்சையை சந்தித்தது, அதுமட்டும் இல்லாமல் இவர் மற்ற படத்தை காப்பி அடிக்கிறார் என பல ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள், அதற்க்கு அட்லியோ சுரங்கள் 7 தான் அத்தான் மாற்றிமாற்றி அமைக்கிறார்கள் என ஏதேதோ சொல்லி மழுப்ப பார்த்தார் அனால் ரசிகர்களோ அவரை விடவில்லை.

இப்படி இருக்க மேலும் ஒரு தயாரிப்பாளர் அட்லி மீது காண்டில் இருக்கிறார் ஆம் அம்மா கிரியேஷன்ஸ் T.சிவா ஒரு பேட்டியில் அட்லி மீது நெருப்பு அனலை கக்கியுள்ளார், அந்த அளவுக்கு கோபமாக பேசியுள்ளார், அவர் பேசியதாவது அட்லீக்கு எந்த தயாரிப்பாளரும் படம் கொடுக்க கூடாது, எந்த ஹீரோவும் கால் சீட் கொடுக்க கூடாது அந்த தண்டனையை அவர் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டும் என நெருப்பு அனலை அவர் மீது கக்கியுள்ளார்.