fbpx
Connect with us

Cinemapettai

சினிமா உலகம் செத்துக் கொண்டிருக்கிறது- டி.ராஜேந்தர் கவலை

News | செய்திகள்

சினிமா உலகம் செத்துக் கொண்டிருக்கிறது- டி.ராஜேந்தர் கவலை

t_rajendarராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் மார்ச் 4ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘போக்கிரி ராஜா’.

‘போக்கிரி ராஜா’ படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு பேசியது:

சினிமா முன்பு போல் இல்லை. நாங்கள் இருந்த காலம் எல்லாம் பொற்காலம். ஆனால், இன்றைக்கு அந்த காலம் போல் இல்லை. அனைத்து இயக்குநர்களும் மிகவும் கஷ்டப்பட்டு தான் ஜெயிக்க வேண்டியது இருக்கிறது. சினிமா உலகம் செத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு சோறு போட்டது சினிமா தான். அரசியல் புகழை வைத்து நான் சினிமாவுக்கு வரவில்லை. சினிமா புகழை வைத்து தான் அரசியலுக்கு வந்தேன். அந்த சினிமா நன்றாக இருக்க வேண்டும்.

‘போக்கிரி ராஜா’ தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் என் நண்பர். அவருக்கு ஒரு கஷ்டம் ஒடி வந்து நின்றேன். சினிமாவில் ஒருவருக்கு கஷ்டம் என்றால் நான் ஒடி வந்து நிற்பேன். ‘போக்கிரி ராஜா’ 4ம் தேதி வெளியாகி பெரிய வெற்றி பெறும்” என்று தெரிவித்தார் டி.ராஜேந்தர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top