Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிம்பு சொல்லி அத்திவரதரை தரிசித்த டி ராஜேந்தர். அவரின் வேண்டுதல் என்ன தெரியுமா ?
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். சாமானியன் முதல் செலிபிரிட்டி வரை இந்த் லிஸ்ட் நீளும். இந்நிலையில், நடிகர், இயக்குனர், அரசியல் பிரமுகருமான டி.ராஜேந்தர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரை தரிசனம் செய்ய சென்றிருக்கிறார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘அத்திவரதர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அதிர்ஷ்டம் கொடுக்க வேண்டும். மக்கள் அத்திவரதரை காண கஷ்டப்பட்டு போகவில்லை இஷ்டப்பட்டு போகிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் என் மகன் சிலம்பரசன் எனக்கு போன் செய்து அத்திவரதர் பெருமாளை தரிசனம் செய்து விட்டீர்களா? என கேட்டார்.
என்னுடைய வேண்டுதல் எல்லாம் சிலம்பரசனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்பது மட்டும் தான். நான் எந்த பெண்ணை வேண்டுமென்றாலும் முடிவு செய்யலாம். ஆனால் அப்பெண் சிலம்பரசனுக்கு பிடித்தவராக அவர் மனதிற்கு ஏற்றவராகவும் அமைய வேண்டும், என்பது தான் முக்கியம். அப்படிப்பட்ட ஒரு பெண்ணை சிலம்பரசனுக்கு கிடைக்க அத்திவரதர் தான் வழிகாட்டவேண்டும்’ என்று கூறினார்.
