டிபி கஜேந்திரன் இயக்கிய சூப்பரான 5 படங்கள்.. காமெடி மட்டுமில்ல படமும் செம லிஸ்ட்

குடும்ப பாங்கான கதைகளை, கதாபாத்திரங்களை மிக அற்புதமாக கையாண்டவர் தான் டி பி கஜேந்திரன். தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக, ஒரு நடிகராக இடம் பிடித்தவர். 1985ல் சிதம்பர ரகசியம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கஜேந்திரன்.

பின்பு 1988-ல் ‘வீடு மனைவி மக்கள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் படைப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

எங்க ஊரு காவல்காரன்: டி பி கஜேந்திரன் இயக்கத்தில் ராமராஜன், கௌதமி, நம்பியார் நடிப்பில் 1988-ல் வெளிவந்த படம் எங்க ஊரு காவல்காரன். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்து விட்டது பாடல்கள். ஊர் காவலானாக ராமராஜன் நடித்த கதாபாத்திரம் கிராமத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 100 நாட்களை தாண்டி இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டு மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டான படமாகப் பார்க்கப்பட்டது.

மிடில் கிளாஸ் மாதவன்: இந்த படத்தில் நடுத்தர மக்களின் வாழ்க்கை தரத்தை மிகத் துல்லியமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இயக்குனர் கஜேந்திரன். இந்த படத்தில் பிரபு, அபிராமி, வடிவேலு, விவேக், விசு போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் அபிராமின் நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

வடிவேலு, விவேக், விசு காமெடி கதாபாத்திரம் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. உதவாக்கரையாக இருந்து சீட்டு விளையாடும் அப்பனுக்கு இரண்டு பெண் குழந்தைகள் அவர்களை கல்யாணம் செய்து கொடுக்கவேண்டிய கட்டாயத்தினால், அபிராமியை திருமணம் செய்து கொள்கிறார் பிரபு . இவர்கள் கூட்டுக்குடும்பமாக நடுத்தர வர்க்கத்தில் படும் அவஸ்தைகளை மிக அற்புதமாக வெளிக்கொண்டு வந்து இருப்பார் இயக்குனர்.

பாண்டி நாட்டு தங்கம்: கார்த்திக், நிரோஷா, செந்தாமரை, செந்தில், கோவை சரளா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1989ல் வெளிவந்த படம் பாண்டிய நாட்டு தங்கம். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பார், அனைத்து பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஒரு நேர்மையான பாரஸ்ட் அதிகாரியாக கார்த்திக் நடித்திருப்பார். அவர் ஒரு கிராமத்திற்கு பணி மாற்றம் செய்யப்படுகிறார். அங்கு உயர்ந்த பதவியில் இருக்கும் செந்தாமரை சந்தன மரங்களை கடத்துகிறார். மறுபுறம் கார்த்திக் நிரோஷாவை காதலிக்கிறார். இப்படித்தான் கதை அமைக்கப் பட்டிருக்கும், முழு படம் பார்க்க வேண்டும் என்றால் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

பந்தா பரமசிவம்: பிரபு, கலாபவன்மணி, மோனிகா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2003ல் வெளிவந்த படம் பந்தா பரமசிவம். ட்ராமா மற்றும் காமெடி கலந்த இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த படம். குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்டிய படங்களில் இதுவும் ஒன்று. அதேபோல் பிரபுவுக்கு இது போன்ற படங்களை வெளியிட்டு வெற்றி படமாக்கினார் இயக்குனர் கஜேந்திரன்.

பட்ஜெட் பத்மநாதன்: முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரத்தில் உருவான படம்தான் பட்ஜெட் பத்மநாதன். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு, ரம்யா கிருஷ்ணன், மும்தாஜ், விவேக், மணிவண்னன் போன்ற பிரபலங்கள் நடித்துருபார்கள். பிரபு கஞ்சத்தனமாக நடிப்பில் மிக அற்புதமாக நடித்திருப்பார், எப்படி ஒரு நடுத்தர வர்க்க குடும்பம் பணத்தை சேமிப்பதற்காக அவசியப்படுகிறது என்பதை மையமாக கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த படமும் குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்டிய படமாக பார்க்கப்படுகிறது.

இப்படி துவண்டு கிடந்த தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் ஈட்டி கொடுத்த இயக்குனர்களின் பட்டியலில் கஜேந்திரன் முக்கியமான இடத்தில் உள்ளார். இயக்க மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட 70 படங்களில் நடித்துள்ளார் என்பது குறுப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்