Connect with us
Cinemapettai

Cinemapettai

ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர்களை போட்டுக் கொடுத்தது சுவிஸ் அரசு: மொத்த பேர் குடுமியும் மோடி கையில்

modi-swizz-bank

Politics | அரசியல்

ஸ்விஸ் வங்கியில் பணம் வைத்திருப்பவர்களை போட்டுக் கொடுத்தது சுவிஸ் அரசு: மொத்த பேர் குடுமியும் மோடி கையில்

சுவிட்சர்லாந்தில் உள்ள அரசு வங்கியில் இந்தியாவைச் சேர்ந்த பணக்காரர்கள் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.இதன் பட்டியலை மோடியின் கையில் தாரை வார்த்தது சுவிஸ் அரசு. இதனால் கருப்பு பணத்திற்கு சொந்தக்காரர்கள் பீதியில் உள்ளனர்.

உலக அளவில் பிரபலமான சுவிஸ் வங்கியில் பல நாடுகளைச் சேர்ந்த பணக்காரர்களின் வங்கி கணக்கு உள்ளது. சொந்த நாட்டின் அரசுக்கு வரி கட்டாமல் வெளிநாடுகளில் பணம் போடுவதில் சுவிஸ் பேங்க் முன்னிலையில் இருக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் என அனைவரும் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். சுவிஸ் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தருமாறு நீண்ட நாட்களாக மத்திய அரசு அந்த வங்கி மேலாளரிடம் கோரிக்கை வைத்து வந்தது. தற்போது சிஸ்டர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியர்கள் வைத்திருக்கும் வங்கிக் கணக்குகளை மத்திய அரசிடம் தர முடிவு செய்துள்ளது.

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை அந்நாட்டு அரசு மத்திய அரசிடம் செப்டம்பர் 1ஆம் தேதி தரும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுபோல் மத்திய அரசுக்கு விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் முதல் கட்டமாக பட்டியலை வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் தகவலை மட்டுமே கொடுத்துள்ளது.

2018 ஆம் ஆண்டு வரை உள்ள கணக்குகளை மட்டுமே மத்திய அரசுக்கு சுவிஸ் வங்கி அளித்துள்ளது. மேலும் இந்த ஆண்டில் பலர் தனது கணக்குகள் முடித்துக் கொண்டுள்ளனர். இதில் ஒரு முறை பணம் செலுத்தி இருந்தால் கூட அவர்களது தகவல்கள் தெரிவிக்கப்படும் என சுவிஸ் அரசு மத்திய அரசிடம் கூறியுள்ளது. ஆகையால் இம்மாத இறுதிக்குள் ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் மொத்த ஜாதகமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top