Tamil Cinema News | சினிமா செய்திகள்
சாப்பாடு மட்டும் இல்லை.. இனி இதுவும் உண்டு.. தூள் கிளப்பும் ஸ்விக்கி
உணவு பிரியர்களுக்கு நினைத்த நேரத்தில் ஆர்டர் செய்து சாப்பிடுவதற்கு ஸ்விக்கி மிகவும் முக்கியமான App ஒன்றாகும். அந்த வகையில் உணவை இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பாக கொடுத்துவிடுவார்கள்.
இந்த நிறுவனம் அடுத்தகட்டமாக உணவில் மட்டும் இல்லாமல் மற்ற பொருட்களையும் ஆன்லைனில் கொடுக்க உள்ளனர். தற்போது பெங்களூரில் தொடங்கப்படும் பின்னர் 2020ஆம் ஆண்டில் இந்த சேவை நாடு முழுவதும் 300 நகரங்களை உருவாக்கப்படும்.
தற்போது ஸ்விக்கி ஸ்டோர்களையும் தொடங்குகிறது, இதன் மூலம் மளிகை பொருட்கள், மருந்துகள், பூக்கள் போன்றவற்றை ஆன்லைனில் புக்கிங் செய்து பெறலாம்.
இவர்கள் முக்கியமான பகுதிகளை மக்களின் வாழ்க்கை தரத்திற்கு ஏற்றவாறு விரிவு படுத்த உள்ளனர். பிக்பாஸ்கட்,அமேசான் மற்றும் பிற ஆன்லைன் பயன்பாடுகளும் மளிகை பொருட்களும் வழங்குகின்றன என்பதாக இருந்தாலும் இவர்களின் சேவையைப் பொருத்து மற்ற நிறுவனத்திற்கு நெருக்கடியாகத்தான் இருக்கும்.
