Tamil Cinema News | சினிமா செய்திகள்
இந்தி இயக்குனரை திருமணம் செய்ய போகும் ஸ்வேதா பாசு…

ஸ்வேதா பாசு:
பாலியல் தொழில் செய்ததாக வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு, இந்தி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களை தவறாக அழைப்பதை இந்திய சினிமா உலகம் காஸ்டிங் கவுச் எனக் கூறுகிறது. பல வருடமாக நடைபெறும் இந்நிகழ்வு சில வருடமாக தான் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. பல நாயகிகள் தங்களுக்கு நேர்ந்த சோகத்தையும் வெளியுலகிற்கு சொல்லி வருகிறார்கள். இப்படி சிலர் மாட்டுகிறார்கள் என்றால் பலர் பாலியல் தொழில் செய்வதையும் சாதாரணமாவே நடத்துகின்றனர். இதனால், நடிகைகள் பாலியல் வழக்கில் சிக்கி சிறை செல்வதும் தொடர்கதையாக இருக்கிறது. பிரபலமாக இருக்கும் நடிகைகள் திடீரென ப்ரேக்கிங் செய்திகளில் அடிப்படுவர். ஆனால், சில வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க அவர்களுக்கும் வாய்ப்புகள் வரத்தான் செய்யும்.
இப்படி ஒரு பாலியல் வழக்கில் சிக்கியவர் தான் ஸ்வேதா பாசு. குழந்தை நட்சத்திரமாக நடித்த போது தேசிய விருது பெற்றவர், குமரியான பின்னர் சில படங்களில் நடித்தார். மேலும் தெலுங்கு, இந்திப் படங்களில் படங்களில் நடித்துள்ளார். தமிழில் கருணாசுடன் ரா ரா, சந்தமாமா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏனோ சினிமாவில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. இதை தொடர்ந்து, பாலியல் தொழில் செய்ததாக அவரை காவல்துறை 2014ம் ஆண்டு கைது செய்தது. ஆனால், நான் யார் நிர்பந்தத்துடன் இத்தொழிலை செய்யவில்லை. என் வாழ்விற்காகவே இப்படி செய்தேன் என ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, 60 நாட்கள் காவலில் இருந்து திரும்பியவருக்கு சினிமா உலகம் மீண்டும் கதவை திறக்கவில்லை. தொடர்ந்து, சீரியல் வாய்ப்புகள் வர அதில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் வெளியான சந்திர நந்தினி வட மற்றும் தென்னிந்திய பகுதிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.cinema
இந்நிலையில், பிரச்சனையில் ஸ்வேதா இருந்த போது அவருக்கு உறுதுணையாக இருந்த ரோஹித் மிட்டல் என்னும் இந்தி இயக்குனரை காதலித்து வருவதாகவும், இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக பாலிவுட்டில் ஒரு தகவல் றெக்கை கட்டி பறந்து வருகிறது. இதுகுறித்து, மனம் திறந்து இருக்கும் ஸ்வேதா, ஆம் எனக்கும் ரோஹித்துக்கும் நிச்சயம் முடிந்து விட்டது. நான் தான் அவரிடம் என் காதலை கூறினேன். அவரும் மனப்பூர்வமாக என்னை ஏற்றுக் கொண்டார். இரு வீட்டாரும் எங்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததால், உடனே நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. விரைவில் திருமண தேதி குறித்து முடிவு எடுத்து விட்டு முறையாக அறிவிப்போம். பழைய வாழ்க்கை குறித்து யாரிடமும் பகிர்ந்து கொள்ள நான் விரும்பவில்லை என்றார்.
