Tamil Cinema News | சினிமா செய்திகள்
மனைவிக்காக ஆனந்த் அவுஜா கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்
பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அவுஜா தனது மனைவிக்காக செய்த வேலையால் ரசிகர்களே ஆச்சரிய அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். இவர் டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அவுஜாவை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற இருந்தது. அதே சமயம், அனில் கபூரின் அண்ணன் போனி கபூர் மனைவி ஸ்ரீதேவி இறப்பால் குடும்பமே சோகத்தில் முழ்கியது. இதனால் தனது திருமணத்தை மும்பையிலேயே எளிமையாக நடத்த சோனம் திட்டமிட்டார். அதன்படி, இரு குடும்ப நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் சோனம் பிஸியாக நடித்து வருகிறார். வீர் தி வெடிங், சஞ்சு ஆகிய படங்கள் அவரது நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. துல்கர் சல்மானுடன் தி ஸோயா பேக்டர், ஏக் லடுக்கி கோ தேகா தோ ஐசா லகா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னதாக, தன் திருமணத்தை முடித்த கையோடு சோனம் தனது ட்விட்டர் பெயரில் கணவரின் குடும்ப பெயரான அவுஜாவை இணைத்து கொண்டார். இதற்கு ஒரு பக்கம் ஆதரவு எழுந்தாலும், மறுபக்கம் எதிர்ப்பே நிலவியது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சோனம், நான் பெண்ணியவாதி தான். என் பெயருக்கு பின்னால் எந்த பெயரை இணைத்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும். கபூர் என்பதும் ஆண் பெயர் தானே என காட்டமாக பதில் அளித்தார்.
இந்நிலையில், மனைவிக்காக ஆனந்த் அவுஜா தன் இன்ஸ்டாகிராம் கணக்கின் பெயரில் மாற்றம் செய்து இருக்கிறார். சோனத்தின் பெயரில் இருக்கும் முதல் எழுத்தான ‘s’ ஐ தன் பெயருடன் இணைத்து இருக்கிறார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பை உண்டாக்கி இருக்கிறது.
