Connect with us
Cinemapettai

Cinemapettai

sweet-actress

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

எனக்கு கல்யாணம் ஆனா என்ன, நீங்க வழக்கம் போல நெருக்கமாக நடிங்க.. தாராளம் காட்டும் பிரபல நடிகை

வட இந்தியாவிலிருந்து தென்னிந்திய சினிமாவில் தஞ்சம் புகுந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் அந்த ஸ்வீட் நடிகை. சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. புதிதாக திருமணம் முடிந்த நடிகை அல்லவா.

கணவருடன் அருகிலிருக்கும் தீவுக்குச் சென்று ஹனிமூனை வெகு விமர்சையாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அங்கிருந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை அனுப்பியும் குஷிபடுத்தி வருகிறார்.

இது ஒருபுறமிருக்க வழக்கமாக திருமணமான நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டார்கள், இயக்குனர்களிடம் முத்தக்காட்சி, ரொமான்ஸ் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைப்பார்கள்.

ஆனால் அந்த ஸ்வீட் நடிகை எந்தவொரு கோரிக்கையும் வைக்கவில்லையாம். மற்ற நடிகைகளுக்கு மாறாக திருமணமானால் என்ன, வழக்கம்போல் நடிகர்களுடன் முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க தயார் தான் என கூறியுள்ளாராம்.

ஹனிமூன் முடிந்து தற்போது புது வீட்டில் குடியேற உள்ள அந்த ஸ்வீட் நடிகை, விரைவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் அனைவருக்கும் அக்கட தேசத்தில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி கொடுக்க உள்ளாராம். அதில் பல முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விட உள்ளார்.

நம்ம ஊரில் இருந்தும் சில ஹீரோக்கள் அதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் முக்கியமாக அந்த டாப் ஹீரோ ஏற்கனவே நடிகையுடன் மூன்று படங்களில் நடித்துள்ளதால் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்கிறார்கள்.

அந்த ஸ்வீட் நடிகையின் இந்த நெருக்கமான முடிவு அனைத்து நடிகர்களுக்கும் குஷியை கொடுத்துள்ளதாம். இதனால் தற்போது அக்கட தேசத்தில் அந்த நடிகைக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளதாம்.

Continue Reading
To Top