Tamil Cinema News | சினிமா செய்திகள்
அமலா பாலை வெகுவாக புகழ்ந்த எஸ்.வி.சேகர்! சினிமாவிற்கு சென்சார் தேவை இல்லை
அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்துள்ளார் அமலா பால். ஆக்ஷன் அட்வெஞ்சர் திரில்லர் படமான இதை அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கி உள்ளார். ஜோன்ஸ் தயாரித்துள்ளார. அருண் கதை எழுதியுள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் அண்மையில் நடந்தது. இந்த விழாவில் எஸ்.வி.சேகர் பேசுகையில், ‘அதோ அந்த பறவை போல பாட்டு வரி தான் இப்படத்தின் தலைப்பு. நம்மிடம் இப்படியான படங்கள் வருவதற்கு இப்போது தான் வாய்ப்பு வந்திருக்கு.
சினிமாவில் இரண்டு வகை. ஓடும் படம், ஓடாத படம் அவ்ளோ தான். சினிமாவில் ராமராஜன் பசுமாடு வைத்து பால் கறக்கும் படம் ஓடிவிட்டால் அதேபோல் பத்துப்படம் எடுப்பாங்க. ஏன்னா, இது வியாபாரம். நாங்கள் படம் எடுத்த காலத்தில் பத்து லட்சத்திலேயே படத்தை எடுப்போம். இப்போது ஒரு நாளைக்கு நாற்பது லட்சம் ஆகுது.
சினிமாவில் மட்டும் தான் உள்ளே வந்து நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. முதலில் சினிமாவை தெரிந்து கொண்டு உள்ளே வரவேண்டும். இந்தப்படத்தில் பெரிய பிளஸ் அமலாபால், அவருக்கு எல்லா மொழிகளிலும் மார்க்கெட் இருக்கு. இந்த படத்தை ரொம்ப பிரமாதமாக எடுத்திருக்காங்க.
அமலாபாலின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன். சினிமாவிற்கு சென்சார் தேவையே இல்லை என்பது என்னோட கருத்து. நம்பிக்கை வேற ஓவர் நம்பிக்கை வேற. சரியான நேரத்தில் படத்தை வெளியீடுங்கள்.
என் படம் எப்போது வெளியானாலும் ஓடும் என்று ஓவர் நம்பிக்கை வைக்காதீங்கள். அதனால், இப்படத்தை அப்படி சரியான நேரத்தில் வெளியீட்டு வெற்றி காண வாழ்த்துகிறேன்’ என்றார்.
