fbpx
Connect with us

Cinemapettai

கவர்னரை மீட் பண்ணுங்க கமல்! பிரச்னையை கமல் வீட்டுக்கு திருப்பி விட்ட எஸ்.வி.சேகர்..

kamal sv sekhar pic

News | செய்திகள்

கவர்னரை மீட் பண்ணுங்க கமல்! பிரச்னையை கமல் வீட்டுக்கு திருப்பி விட்ட எஸ்.வி.சேகர்..

தமிழ்நாட்டின் பிக்பாஸ் யாரென்று கேட்டால் கமல் என்று சின்ன குழந்தையும் சொல்லும். அனால் அவரை சுற்றும் பிரச்சனைகளும் அதற்கு அனைவரும் குடுக்கும் யோசனைகளும் ரொம்ப ஓவரா வருகிறது. இப்படிதான் ஒரு சாணக்கிய யோசனை கூறுகிறார் எஸ் வி சேகர் .

அதென்ன யோசனை? தமிழக அமைச்சர்களின் பார்வைக்கு போகும்படி தாங்கள் கொடுத்த லஞ்ச பட்டியலை அவர்களின் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று கமல் கேட்டுக் கொள்ள, அடுத்த நாளே மேற்படி மின்னஞ்சல் பியூஸ் ஆகிப் போனது. இணையதளத்திலிருந்து அந்த மின்னஞ்சல் முகவரியையே நீக்கிவிட்டது தமிழக அரசு.

இதுவே கமலின் முதல் வெற்றி என்று அவரது ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தாலும், வாட் நெக்ஸ்ட்? என்ற கேள்வி ரசிகர்களை வாட்டியது. மறுநாளே வேறொரு வழி சொன்னார் கமல். எல்லாரும் லஞ்ச ஊழல் விபரங்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புங்க என்றார்.

இந்த இடத்தில்தான் தன் மூக்கையும் அறிவையும் ஒரு சேர நுழைக்கிறார் எஸ்.வி.சேகர். “பேசாம எல்லா புகாரையும் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு அனுப்பினாலென்ன? அதையெல்லாம் அவரே கொண்டு போய் கவர்னரிடம் கொடுக்கலாமே.” இதுதான் அவர் கொடுத்த ஐடியா.

kamal sv sekhar picஒருவேளை, கமல் கவர்னர் சந்திப்பு மட்டும் நிகழ்ந்துவிட்டால், கூவத்தூர் ரிசார்ட்டுக்கு எம்.எல்.ஏ க்களை கடத்தாமலேயே பரபரப்பை கிளப்பிவிட முடியும் கமலால்!

இன்றைய நாட்டு நிலவரப்படி பி.ஜே.பியை உத்து பார்த்தாலே கைது. ஆனால் சுற்றி சுற்றி அடிக்கிறார் கமல். யாருக்கு தெரியும் அரசியல்வியாதிகள் ஆறப்போட்டு கூட அடிக்கலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top