சிங்கப்பெண்ணில் போட்ட திட்டத்தை நிறைவேற்ற போகும் சுயம்புலிங்கம், மித்ரா.. சதியை முறியடிப்பார்களா அன்பு, மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர இருக்கிறது. ஆனந்தி செவரக்கோட்டையில் நடக்கும் திருவிழாவுக்கு கிளம்பும்போதே அவளுக்கு பிரச்சனை வரப்போகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது.

ஆனந்தியின் அப்பா அழகப்பன் கையில் கோவில் பொறுப்பை கொடுத்து, சாமி நகையை திருடி விட்டு அந்த குடும்பத்தின் மீது பழி போட சுயம்புலிங்கம் திட்டமிட்டு இருக்கிறான். அதே நேரத்தில் நெருப்பு மிதிக்க இருக்கும் ஆனந்திக்கு அந்த நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையை ஏற்படுத்தி சாமி குத்தம் ஆகிவிட்டதாக புரளியை கிளப்பி விட திட்டமிட்டு இருக்கிறான்.

ஆனந்தியால் சாமி குத்தம் ஆகிவிட்டதால் அவள் காலம் முழுக்க கோயிலை பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும் என்ற பரிகாரத்தையும் சொல்ல வைக்க சுயம்புலிங்கம் திட்டமிட்டு இருக்கிறான். இது எதுவுமே தெரியாமல் அன்பு ஒரு பக்கம் தன்னுடைய காதலை சொல்லவும், மகேஷ் ஒரு பக்கம் திருமணத்தைப் பற்றி பேசவும் நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சதியை முறியடிப்பார்களா அன்பு, மகேஷ்

நேற்றைய எபிசோடில் திருவிழா களைகட்ட ஆரம்பித்து கோவிலுக்கு எல்லோரும் வருகிறார்கள். அன்பு அங்கு இருக்கும் கடையில் ஒரு ஜிமிக்கி கம்மல் வாங்கி இந்த கம்மலை கொடுத்து தன்னுடைய காதலை சொல்ல காத்துக் கொண்டிருக்கிறான்.

மகேஷ் கொலுசு ஒன்றை வாங்கி வைத்துக் கொண்டு இதை கொடுத்து திருமணத்தைப் பற்றி பேச வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறான். இவர்கள் எல்லோருக்கும் பிரசாதம் வாங்கப் போன ஆனந்தி தன்னுடைய அண்ணன் கைப்பட எழுதிய கடிதத்தை பார்க்கிறாள்.

அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு அய்யனார் சிலை பக்கத்தில் வருமாறு அவளுடைய அண்ணன் வேலு கடிதம் எழுதி இருக்கிறான். நகையை திருட காத்திருக்கும் மலையன் பலூன் விற்பது போல் கோயிலில் வந்து தங்கி விடுகிறான்.

எல்லோரும் நெருப்பு மிதிக்கும் இடத்தில் பரபரப்பாக இருக்கும் நேரத்தில் அம்மன் கழுத்தில் இருக்கும் நகைகளை திருடுவதற்கு இவர்கள் பக்காவாக திட்டம் போட்டு விட்டார்கள்.

அழகப்பனை அந்த நேரத்தில் திசை திருப்ப மித்ரா ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் வாருங்கள் என்று சொல்லி கோயிலில் இருந்து கொஞ்சம் தூரமாக அழைத்துப் போகிறாள்.

ஆனந்தி நெருப்பு மிதிக்கும் நேரத்தில் என்ன அசம்பாவிதம் நடக்கப் போகிறது, இதை அன்பு மற்றும் மகேஷ் எப்படி தடுத்து நிறுத்துவார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் நகை காணாமல் போனது ஊர் மக்களுக்கு தெரிந்து ஆனந்தியின் வீட்டில் இருந்து அந்த நகையை கண்டெடுக்கும் போது கண்டிப்பாக ஒரு பெரிய பிரளயமே ஏற்பட இருக்கிறது.

அன்பு, மகேஷ், ஆனந்தியின் அண்ணன் வேலு மூவரும் இணைந்து இதை எப்படி கண்டுபிடிப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -