Reviews | விமர்சனங்கள்
நம்ம ஊரு ஆக்ஷன் திரில்லர் – சுட்டுப்பிடிக்க உத்தரவு திரைவிமர்சனம்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போக்கிரி ராஜா படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள ஆக்ஷன் படம் சுட்டுப்பிடிக்க உத்தரவு.
கதை – தன் மகளின் உயிரை காப்பாற்ற தன் நண்பர்களின் உதவியுடன் பேங்கை கொள்ளை அடிக்கிறார் விக்ராந்த். தப்பி செல்வதற்குள் போலீஸ் வந்துவிடுகிறது. சண்டைக்காட்சி, துப்பாக்கி சுடுதல், சேசிங் என தொடர ஹவுசிங் போர்டில் சென்று புகுகின்றனர் மூன்று திருடர்களும். போலீஸ் ஒருபுறம், கமாண்டோ என அப்பகுதியை சுற்றி வளைக்கின்றனர். மறுபுறம் டிவி சேனலை சேர்ந்த இருவர், ஏரியாவில் உள்ள அதுல்யா அவர்களை வைத்துக்கொண்டு லைவ் கவரேஜ் செய்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க அதே காலனியில் தீவிரவாதிகள் பாம் ஒன்றை தயாரும் செய்து வருகின்றனர். இந்த இரண்டு டராக்கும், எவ்வாறு ஒரே கோட்டில் இணைகிறது; போலீஸ் கமிஷனராக மிஸ்கின் போட்ட பிளான் என்ன என்பதன் விளக்கத்துடன் படம் சுபமாக முடிகிறது.
அலசல்– பனைமரத்தை வெட்டுவதற்கு ரம்பம், கோடாலி போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால் ஒரு காகத்தை கொண்டு போய் அதன் மேல் உட்கார வைத்தால் மரம் தானாகவே விழுந்து விடுமே ! இது தானே பழமொழி என்பது போலவே உள்ளது இவர்களின் லாஜிக்; சாரி மாஜிக். எனினும் ஹ – டெக் திரில்லர் போல இல்லாமல் சாமானியனுக்கு புரியும் விதமாக படத்தை எடுத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். ஜேக்ஸ் பீஜாய் இசை படத்துக்கு கூடுதல் பலம். படத்தின் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் தான் படத்தின் ஸ்பெஷல்; அதற்காகவே இப்படத்தை கட்டாயம் ஒருமுறை பார்க்கலாம்.
ரேட்டிங் 2.25 /5 .
