Connect with us

Cinemapettai

ஐந்து படங்கள் ! ஐந்திலும் புதிய தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ! பிறந்தநாளன்று அதிரடி முடிவை அறிவித்த சுசீந்திரன் !

Cinema News | சினிமா செய்திகள்

ஐந்து படங்கள் ! ஐந்திலும் புதிய தயாரிப்பாளர்கள், ஹீரோக்கள் ! பிறந்தநாளன்று அதிரடி முடிவை அறிவித்த சுசீந்திரன் !

சுசீந்திரன்

தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவர். தன்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் அடைத்துக்கொள்ளாமல் பல ஜானர்களில் படம் எடுப்பவர். கமெர்ஷியல் படம். ஜனரஞ்சக சினிமா, கருத்துள்ள படம் என்று விதவிதமாக எடுத்து அசத்துபவர்.

சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்தடுத்து ரிலீசாக உள்ள படங்கள் “ஏஞ்சலினா” மற்றும் “ஜீனியஸ்”. இதனையடுத்து கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து “சாம்பியன்” என்னும் படத்தை இயக்கவுள்ளார். விரைவில் ஸ்ட்ரைக் முடிந்த உடன் துவங்குவார்.

இந்நிலையில் தன் பிறந்தநாளுக்கு ஒரு தினம் முன்பு இந்த டீவீட்டை பதிவிட்டார் சுசீந்திரன்.

Susi twitter

பலரும் இயக்குனருக்கு தங்கள் பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தனர். இந்நிலையில் ஏன் இதை அவர் பதிவிட்டார் என்பது அடுத்த நாள் இவரின் அடுத்த டீவீட்டை பார்த்து புரிய வந்தது.

Susi twitter

பிரபல வார இதழில் இப்படி கிசுகிசுக்கப்பட்ட இதற்கு தன் பிறந்தநாளன்று பதில் அளித்துள்ளார் இயக்குனர்.

Susi twitter

அசோக்குமார் அவர்களின் மரணம் குறித்து பேசியதால் பைனான்சியரிடம் பணம் வாங்கும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் இவருடன் பட பண்ண தயங்குவதாகவும், இந்த வருடம் ஐந்து புதிய தயாரிப்பாளர், ஐந்து ஹீரோக்களையும் அறிமுகப்படுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வருடம் முழுக்க முழுக்க புதுமையான கதைக்களத்துடன் பயணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் மாற்றும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் இயக்குனரே ! எண்கள் ஆதரவு என்றுமே உங்களுக்கு உண்டு ! விரைவில் திரையில் சிந்திப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top