யூசப் பதான் 2008 – 2011 ஆண்டுகளில் 43 ஒரு நாள் போட்டியிலும்,ஒன்பது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா அணிக்காக விளையாடி உள்ளார் .இவர் ஒரு ஆல் ரவுண்டார் ஆக வலம் வந்தார். இவர் கொல்கத்தா அணிக்காக IPL போட்டிகளில் விளையாடி வருகிறார்.

yusuf pathan
yusuf pathan

இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் யூசப் பதானை பிசிசிஐ 5 மாதங்கள் சஸ்பென்ட் செய்துள்ளது. யூசப் பதான் தடை செய்யப்பட்ட இருமல் மருந்தை பயன்படுத்திய புகாரில் பிசிசிஐ இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

யூசப் பதான் தடைசெய்யப்பட்ட போதை மருந்தை பயன்படுத்தியதாக அவர் மீது 2017-ஆம் ஆண்டு புகார் வந்தது. இதையடுத்து கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி டி20 போட்டியின் போது அவரது சீறுநீரை மருத்துவ குழுவினர் பரிசோதித்தனர்.

yusuf pathan
yusuf pathan

இதனை அடுத்து தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியதாக தெரியவந்தது.இந்த மருந்தை யூசப் பதான் ஊசி மூலம் எடுத்துக்கொண்டதாக புகார் வந்தது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று கொண்டு இருந்தது.

யூசப் பதான் இந்த மருந்தை பற்றி விளக்கமளித்து போது அந்த இருமல் மருந்து தடை செய்யப்பட்டது தெரியாது என்று கூறினார்.அந்த இருமல் மருந்து தெரியாமல் தான் உட்கொண்டதாக அவர் கூறினார்.

yusuf pathan
yusuf pathan

அறிவுறுத்திய இருமல் மருந்துக்கு பதிலாக தடை செய்யப்பட்ட மருந்தை கொடுத்ததும் நிரூபணமானது. இந்த விளக்கத்தை  ஏற்றுக்கொண்ட பிசிசிஐ அவருக்கு 5 மாதம் தடைவிதித்து உத்தரவிட்டது.

yusuf pathan
yusuf pathan

இந்த தடை உத்தரவு அனைத்து ஆதாரங்களையும் மற்றும் நிபுணர்களின் ஆலோசனையையும் கருத்தில் கொண்டு பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.இதனால் வரும் IPL போட்டிகளில் தடை விதிக்கப்படும் என கூறப்படுகிறது.