fbpx
Connect with us

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.. நள்ளிரவில் அதிர்ச்சி

sushma-swaraj-passed-away

India | இந்தியா

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.. நள்ளிரவில் அதிர்ச்சி

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் மாரடைப்பால் காலமானார். மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட சுஷ்மா சுவராஜ் மரணம் அடைந்தது நள்ளிரவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனது உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் இந்த முறை அமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறி தேர்தலில் கூட நிற்காமல் இருந்தார். 7  முறை மத்திய மந்திரியாக இருந்துள்ளார். இந்திராகாந்திக்கு பிறகு இரண்டாவது வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ்.

1973 ல் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக தன் பணியைத் தொடங்கினார். 2009-ல் பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.

வெளிநாடுகளில் மாட்டி தவிக்கும் இந்தியர்களுக்கு உதவிகளை செய்து வந்தார். தன் ட்விட்டர் பக்கத்தில், மக்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதில் அளித்து வந்தார் சுஷ்மா சுவராஜ்.

இந்தியாவின் பெண் தலைவர்களில் முக்கியமான சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார். பல மாநிலங்களின் அரசியல் தலைவர்களிடம் நெருக்கமாக பழகி வந்தார். இதை அறிந்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

இன்று இரவு சுஷ்மா சுவராஜ்க்கு திடீர் என்று மாரடைப்பு வந்தது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. சுஷ்மாவுக்கு வயது 67 ஆகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top