fbpx
Connect with us

Cinemapettai

சுஷாந்த் சிங் இறந்த பின் வெளிவந்த புகைப்படம்.. அவர் முகத்தை பார்த்து கதறும் பிரபலங்களின் பதிவு

India | இந்தியா

சுஷாந்த் சிங் இறந்த பின் வெளிவந்த புகைப்படம்.. அவர் முகத்தை பார்த்து கதறும் பிரபலங்களின் பதிவு

சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை மும்பை பாந்த்ரா பகுதியில் இருக்கும் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார், இவருக்கு வயது 34 தான் ஆகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து இது தற்கொலையா.? கொலையா.? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் இந்திய அளவில் இருக்கும் ரசிகர்களுக்கு பெரும் மன வேதனையை அளித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மிகுந்த ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த மனுஷன் எப்படி வாழ்ந்த்துக்காரு, நாகாலாந்து வெள்ளத்தில் சிக்கி தவித்த போது 1 கோடி 25 லட்சம் வரை நிதி உதவி அளித்துள்ளார்.

sushant-singh-cinemapettai-1

sushant-singh-cinemapettai-1

அவர் வீட்டில் இறந்து கிடக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் நெஞ்சை உருக்கி உள்ளது. இதுதான் அந்த புகைப்படத்தின் லிங்க். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை கொண்டதற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின்  முதல் பிரனாய் விஜயன் வரை ஆழ்ந்த அனுதாபங்களை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

பிரதமர் மோடி – சுஷாந்த் சிங் ராஜ்புத்.. ஒரு பிரகாசமான இளம் நடிகர் மிக விரைவில் சென்றார். டிவியிலும், படங்களிலும் சிறந்து விளங்கினார். பொழுதுபோக்கு உலகில் அவரது உயர்வு பலருக்கு உத்வேகம் அளித்தது, மேலும் அவர் பல மறக்கமுடியாத நிகழ்ச்சிகளை விட்டுச் செல்கிறார். அவர் காலமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். ஓம் சாந்தி.

பிணறாயி விஜயன் – சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரது மறைவு இந்திய திரைப்படத் துறைக்கு பெரும் இழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கல். கேரள வெள்ளத்தின் போது அவர் அளித்த ஆதரவை நினைவில் கொள்கிறோம்.

சச்சின் – சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இழப்பு குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியும் வருத்தமுமாக இருக்கிறது, அத்தகைய இளம் மற்றும் திறமையான நடிகர். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இரங்கல், அவரது ஆன்மா RIP ஆகட்டும்.

ரோஹித் சர்மா: இது கவலையைத் தருகிறது, இது நடந்திருக்கிறது என்பதை ஏற்க முடியவில்லை. அற்புதமான நடிகர், ஆன்மா சாந்தியடையட்டும் என் சகோதரா.

விராட் கோலி: சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றி கேள்விப்பட்ட அதிர்ச்சியாக இருக்கிறது. இதை செயலாக்க மிகவும் கடினம். அவரது ஆத்மா RIP ஆகவும், கடவுள் தனது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனைத்து பலத்தையும் அளிக்கட்டும்.

ஷிகர் தவண்: மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளேன். இதை நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்துக்கு எனது அனுதாபங்கள் மற்றும் பிரார்த்தனைகள்.

சுரேஷ் ரெய்னா: சுஷாந்த் சிங் ராஜ்புத் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். மஹியின் பயோபிக் திரைப்படத்துக்காக எங்களுடன் நேரம் செலவிட்டார். அப்போது அவரை சில முறை சந்தித்திருக்கிறேன். நாம் ஒரு அழகான, என்றும் புன்னகையுடன் இருக்கும் நடிகரை இழந்துவிட்டோம். ஓம் சாந்தி.

Continue Reading
To Top