மும்பை: ஆதரவற்ற குழந்தைகளின் படிப்பு செலவிற்கு தோனி நாயகன் பெரிதும் உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நம்முடைய சமூகம் இரண்டு வகையான மனிதர்களை எப்போதும் கொண்டாடி வருகிறது. ஒன்று மக்களின் வாழ்நிலையை உயர்த்த போராடுவது; மற்றொன்று திரையில் சாகசங்கள் செய்து மகிழ்விப்பது. இந்த சம்பவம் பாலிவுட்டில் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் திரையுலகிலும், ரியல் உலகிலும் மக்களுக்கானவர்களாக வாழ்ந்து வருகின்றனர். ஷாருக்கானில் தொடங்கி இர்பான் கான் வரையிலும், ஆமிர்கான் முதல் அக்‌ஷய் குமார் வரையிலும் சமூகத்திற்கான பணிகளை ஆற்றி வருகின்றனர். அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் தோனி நாயகன் சுஷாந்தி சிங் ராஜ்புட். அவர் ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்க தயாராகிவிட்டார்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் 'நெவர் எவர் கிவ் அப்' வசனத்துடன் வெளியானது ஆர்யாவின் கஜினிகாந்த் ட்ரைலர் !

இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவித்துள்ள அவர், தங்கள் குழுவினர் சரியான பள்ளிகளை தேர்வு செய்து வருவதாகவும், சிறுவர்களுக்கு உரிய தேர்வுகள் வைத்து அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். தேர்வில் தேர்ச்சி பெறும் சிறுவர்கள் முழுச் செலவையும் தான் ஏற்கவுள்ளதாக குறிப்பிட்டார். கல்வியின் மகத்துவத்தை தன்னுடைய தாய் உணர்த்தியதாக நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். சிறுவர்கள் தங்களுக்கான அடிப்படை கல்வியை பெற எல்லாத் தகுதிகளும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.