Connect with us
Cinemapettai

Cinemapettai

dhoni-cinemapettai

Sports | விளையாட்டு

சுஷாந்த் சிங் மரணத்தால் சுக்குநூறாக நொறுங்கிப் போன தோனி.. பேச்சு மூச்சே வரவில்லையாம்!

சுஷாந்த் சிங்(Sushant Singh Rajput) மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலக மக்களை துயரத்தில் ஆழ்த்தியது. ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என்று தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர்.

மரணத்திற்கு பின்னால் பிரபலங்களின் வாரிசுகள் காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் நாடகத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி அசுர வளர்ச்சி பெற்றதை பொறுத்துக் கொள்ளாமல் கூட சிலர் அவரின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தி இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு தள்ளி விட்டனர்.

இந்த நிலையில் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தை(‘எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்டு ஸ்டோரி’) இயக்கிய நீரஜ் பாண்டே தோனிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.

அப்போது M.S.தோனி அதிர்ச்சியடைந்து நொறுங்கிப் போய் விட்டாராம். சிறிது நேரம் அவருக்கு பேச்சே வரவில்லையாம். மஹி.. மஹி.. என்று அவர் அழைத்தபோது கூட லைனில் இருந்து கொண்டே பேச முடியவில்லையாம்.

தன்னைப் போலவே ஒரு கதாபாத்திரத்தை திரையில் பார்த்த தோனிக்கு இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போது வரை தனது ட்விட்டர் பக்கத்தில் எந்த ஒரு பதிவும் வெளியிடவில்லை தோனி. இன்னும் அவர் இதிலிருந்து மீள வில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

கழுத்தில் கயிறு இறுகியதால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக இன்வஸ்டிகேஷன் ரிப்போர்ட் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுஷன் இந்திய அளவில் ஏற்பட்ட வெள்ள நிவாரண நிதிக்காக கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்துள்ளார். இவரின் மொத்த சொத்து 64 கோடிதானம்.

Continue Reading
To Top